சேலம் : நட்சத்திர விடுதியில் முதல்வர் - துணை முதல்வர் திடீர் ஆலோசனை

சேலம் : நட்சத்திர விடுதியில் முதல்வர் - துணை முதல்வர் திடீர் ஆலோசனை

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம்

தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் சேலத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் ஆலோசனை நடத்தினர்.

 • Share this:
  தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சேலம் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க உள்ளார். இன்று மாலை அவர் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார். பின்னர் சேலம் மாநகராட்சி பகுதியில் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  இதற்காக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் நேற்று இரவு கார் மூலம் சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள தனியார் (சென்னிஸ் கேட்வே) ஓட்டலில் வந்து தங்கினார். இந்த நிலையில் இன்று காலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து கரூர் சுற்றுப்பயணத்திற்கு செல்ல புறப்பட்டார்.

  பின்னர் திடீரென அவர் சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள சென்னிஸ் கேட்வே ஹோட்டலுக்கு வந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து, அவருடன் சுமார் பத்து நிமிட நேரம் ஆலோசனை நடத்தினார். தேர்தல் சுற்றுப் பயணம் குறித்தும், மற்றும் தேர்தல் பணிகள் குறித்தும் இருவரும் சிறிது நேரம் ஆலோசனை செய்ததாக தெரிகிறது.

  இந்த ஆலோசனையை முடிந்த பின்னர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரூர் சுற்றுப்பயணம் செல்ல புறப்பட்டு சென்றார்.
  Published by:Sheik Hanifah
  First published: