Corona Relief Fund : படிப்பிற்காக உண்டியலில் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கிய சேலம் சிறுவன்

கொரோனா நிவாரண நிதி வழங்கிய மௌலித் சரன்

சேலத்தில் 9 வயது சிறுவன் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

  • Share this:
    உலகம் முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இந்நோய்தொற்று அதிகரித்து உயிர்ப்பலியும் அதிகமாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிதி கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்‌.

    இதையறிந்த சேலம் சின்னத்திருப்பதி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் - சரண்யா தம்பதியின் 9 வயது மகன் மௌலித் சரன், ஆன்லைன் வகுப்பிற்கு டேப் ( TAB ) வாங்குவதற்காக தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணம் 2 ஆயிரத்து 60 ரூபாயை, கொரோனா நிவாரண நிதிக்காக சேலம் மாவட்ட ஆட்சியர் ராமனிடம் வழங்கினார்.

    Must Read : கொரோனாவால் இறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது கண் விழித்ததால் அதிர்ச்சி!

     

    இதுகுறித்து சிறுவன் மௌலித் சரன் கூறுகையில், கொரோனாவால் ஆக்சிஜன் இல்லாமல் உயிர்பலி அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு உதவியாக நான் சேமித்து வைத்திருந்த பணத்தை முதலவர் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
    Published by:Suresh V
    First published: