ராமநாதபுரத்தில் ஆமை வேகத்தில் நடக்கும் பாலம் பணிகள் - பயன்பாட்டிற்கு வருவது எப்போது?

ராமநாதபுரத்தில் ஆமை வேகத்தில் நடக்கும் பாலம் பணிகள் - பயன்பாட்டிற்கு வருவது எப்போது?

ராமநாதபுரம் பாலம்

ராமநாதபுரத்தில் பாலம் கட்டும் பணி மிகவும் மெதுவாக நடைபெற்றுவருகிறது.

 • Share this:
  இராமநாதபுரம் மாவட்டம் ரயில் நிலையம் அருகே இரண்டு ஆண்டுகளாக நடந்துக் கொண்டிருக்கும் பாலம் கட்டும் பணி வருகின்ற ஜுன் மாதம் நிறைவடையும் என்று முதன்மை பொறியாளர் சாமிவேல் நமது நியூஸ்18 உள்ளூர் வாயிலாக தெரிவித்துள்ளார்.

  2019 ஆம் தொடங்கி கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை ஓராண்டு நிறைவடைந்தது. கொடுத்த நேரத்திற்குள் முடிக்காததன் முக்கிய காரணம் தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (TWAD BOARD) காவேரி குடிநீர் குழாய் மற்றும் மின்சாரம் எடுக்க தாமதம் என்று குறிப்பிடுகிறார். அதோடு கொரோனா காரணத்தையும் முன்வைக்கிறார்.

  கொரோனா காலம் முடிந்து பணிக்கு வந்த பிறகு தான் TWAD BOARD பிரச்சனைகளும் சரிசெய்து கொடுக்கப்பட்டது. முன்னதாகவே அனுமதி அளிக்கப்பட்டிருந்தால் பணிகள் இன்னும் விரைவில் நிறைவடைந்திருக்கும் என்று கூறுகிறார்.

  போக்குவரத்து பிரச்சனைக்கு முக்கிய காரணமாக P5 மற்றும் A1 பணிகளை குறிப்பிட்டு சொல்கிறார்கள். ஏனென்றால் அவை பொதுமக்கள் செல்லும் பாதையாக அமைந்துள்ளது. இந்த பாதையின் மையத்தில் தான் அந்த தூண் கட்டப்படுவதாக குறிப்பிடுகிறார். இந்த பிரச்சனைக்கு தீர்வாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்த உதவியை குறிப்பிட்டு சொல்லி நன்றியை தெரிவித்துள்ளார் சாமிவேல்.

  நிலம் கையகப்படுத்தல் பிரச்சனை இருப்பதால் மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு இதை சரிசெய்து தரும்படி தங்களது கோரிக்கையை முன் வைக்கின்றனர். தேர்தல் சமயம் என்பதால் தேர்தல் முடிந்த பிறகு இதற்கான தீர்வை எதிர்பார்ப்பதாக சொல்கின்றனர் திட்டத்துக்கான பொறியாளர்கள்.
  Published by:Karthick S
  First published: