• HOME
  • »
  • NEWS
  • »
  • local-18
  • »
  • ராமநாதபுரம்: பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் கருப்பட்டி டீ

ராமநாதபுரம்: பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் கருப்பட்டி டீ

கருப்பட்டி டீ

கருப்பட்டி டீ

ராமநாதபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள கருப்பட்டி டீ கடை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

  • Share this:
    ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பாரதி நகர் பகுதியில் உள்ளது ‘கிளாசிக் ரைடர் கஃபே’ உணவகம். கார் வேன்களில் சுற்றுலாவுக்கு செல்லும் பயணிகள் முதல் டூவீலர் ஓட்டிகள்வரை கவனம் ஈர்த்துவருகிறது இந்த உணவகம். காரணம், மாவட்டத்திலேயே புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் கருப்பட்டி டீ தான்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்ட கிளாசிக் ரைடர் கஃபே தமிழகம், ஆந்திரா, கேரளா என 30 கிளைகளுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில், தனது 17-வது கிளையாக தொடங்கப்பட்ட  உனவகத்தின் கருப்பட்டி டீ தான் வாடிக்கையாளர்களை சுண்டி இழுத்துவருகிறது என்கிறார்கள் அக்கடையின் பணியாளர்களே.

    இதுகுறித்து, ராமநாதபுரம் கிளையின் நிறுவனர் ஜாவித் அகமது ‘நியூஸ் 18 உள்ளூர்’ க்கு அளித்த பேட்டியில், “எங்கள் உணவகத்தில் ஷவர்மா, பார்பிக்யூ, ஃபிரைட் சிக்கன், பர்கர், சாண்ட் விட்ச், மில்க் ஷேக் என வித விதமான சிற்றுண்டிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஏப்ரல் 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்ற சலுகையும் அறிவித்துள்ளோம்.

    புதுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக  சிஸ்லிங் ஷவர்மா, மூங்கில் பிரியாணி என இரண்டு புதிய உணவுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். சாதாரண, ஷவர்மா போல் இல்லாமல்  ஒருவித ஈர்ப்புத்தன்மையுடன் இருக்கும். அதாவது, 10 நிமிடத்திற்கு புகையுடன் கூடிய வாசனை வந்து கொண்டே இருக்கும்.  மூங்கில் பிரியாணி… இது ராமநாதபுரத்திலேயே முதன்முறையாக இங்குதான் அறிமுகப்படுத்துகிறோம்” என்றவர், இவ்வுணவகத்தின் சிறப்பான கருப்பட்டி டீ குறித்து கூறினார். “நுழைவாயிலிலேயே ‘முகவை கருப்பட்டி டீக்கடை’ என்பதை  நாங்கள் அறிமுகப்படுத்தி வைத்துள்ளோம். இதன், ஸ்பெஷலே கருப்பட்டி தான்.

    பலவகையான தேநீர் வகைகள், காஃபி வகைகளை நாம் அருந்தியிருப்போம். ஆனால், இது முழுக்க முழுக்க கருப்பட்டி கொண்டு தயாரிக்கப்படுகின்றது. ராமநாதபுரத்திலேயே இந்த வகை டீக்கடையை நாங்கள்தான் தொடங்கியுள்ளோம்.

    பொதுவாக, தேநீர் கடைகளில் சர்க்கரை அல்லது நாட்டுச்சர்க்கரை தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இங்கு சுத்தமான கருப்பட்டி கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனை, பொது மக்களும் மிகவும் ஆர்வத்துடன் வாங்கி அருந்திவிட்டு உற்சாகத்தோடு செல்கிறார்கள். வெறும், எனர்ஜி மட்டுமல்ல இயற்கையான உணவு என்பதால் உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது” என்கிறார் உற்சாகப் புன்னகையுடன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: