ஊரடங்கில் நோயாளிகளுக்காக இலவச சேவை வழங்கும் ஆட்டோ ஓட்டுநர்...!

ஆட்டோ ஓட்டுநர் முகமது யூசுப்

வீடுகளில்  இருக்கும் நோயாளிகள் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு செல்வதற்கு தன்னுடைய ஆட்டோவை வாடகை இல்லாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பரமக்குடியில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளுக்கு இலவச  சேவை அளிக்கிறார் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர்.

  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பயணிகள் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருபவர் முகமது யூசுப். இவர்  சாலை விபத்துகள் மற்றும் அவசர சிகிச்சைக்கு ரத்தம் கிடைப்பதற்கு ஒருங்கிணைப்பாளராக செயல்படுவது என பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்துவரும்  தன்னார்வலர்.

  தற்போது கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கால் பொதுப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வீடுகளில்  இருக்கும் நோயாளிகள் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு செல்வதற்கு தன்னுடைய ஆட்டோவை வாடகை இல்லாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

  Also read... தேர்தலில் வெற்றி பெற வைக்காவிட்டால் உயிருடன் இருக்கமாட்டேன் என கூறிய வேட்பாளர் உயிரிழப்பு...!

  பரமக்குடியில் உள்ள தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை எனும் அமைப்பினர் இவரது சேவைக்கு உறுதுணையாக உள்ளனர். இன்று ஒரே நாளில் 15-க்கும் மேற்பட்ட சவாரிகள் செய்து பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு வாடகையில்லாமல் நோயாளிகளை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் முகமது யூசுப் பின் சேவையை பொதுமக்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

  செய்தியாளர் - கு.தமிழ்ச்செல்வன்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: