Home /local-18 /

நாமக்கல்: 12 ஆண்டுகள் வீட்டிலிருந்த மஹா முனீஸ்வரன் சிலை

நாமக்கல்: 12 ஆண்டுகள் வீட்டிலிருந்த மஹா முனீஸ்வரன் சிலை

மஹா

மஹா முனீஸ்வரன் கோயில்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டூ பள்ளிபாளையம் செல்லும் வழியில் வரகூராம்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது மஹா முனீஸ்வரர் கோயில்.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டூ பள்ளிபாளையம் செல்லும் வழியில் வரகூராம்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது, மஹா முனீஸ்வரர் என்ற கோயில். இக்கோயிலில் உள்ள சிலை 1930 ஆண்டு அவ்வூரை சேர்ந்த ஒருவர் திருப்பூரில் இருந்து எடுத்து வந்து, தன்னுடைய வீட்டில் 12 ஆண்டுகள் நவதானியங்கள் கொண்டு மூடி வைத்து இருந்ததாக கூறுகிறார்கள்.

    அதன்பின் அச்சிலைக்கு அபூர்வ சக்தி பெற்று வீட்டில் வைத்திருக்க முடியாமல், ஒரு புளியமரத்தின் அடியில் வைத்தனர் என்று கூறப்படுகிறது. அன்று முதல் படிப்படியாக கோயில் கட்டி வழிபாடு செய்து வருவதாக கூறுகிறார்கள்.

    கோயில் சிறப்பம்சங்களாக சன்னதி அமைந்திருக்கும் கோபுரம் உயரத்திற்கு இடது, வலது பகுதியில் பெரிய முனீஸ்வரர் சிலை அமைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக 1008 மணிகள் கொண்டு பெரிய வேல்கள் வைக்கப்பட்டுள்ளன. கோயில் வெளிப்புறத்தில் சுற்றியும் முனிஸ்வரர் அவதாரங்கள் உள்ளன.

    கோயிலைச் சுற்றி சுவர் முழுவதும் படங்கள் வரைந்தும் சிலைகள் வைத்து, கண்களை கவரும் வகையில் வண்ணப்பூச்சுகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    சன்னதிக்கு முன்பு கன்னிமார் சிறிய கோபுரத்தில் அடியில் வைக்கப்பட்டுள்ளது. கோயில் உள்ளே சுற்றியும் தூண்கள் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தூண்களிலும் வித்தியாசமான உருவச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

    கபால, சுல, சங்கிலி, யுத்த, காத்த, உதிர, வீர,பூ,ஜட என பல்வேறு முனீஸ்வரர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து கோயில் தர்மகர்த்தாவிடம் கேட்ட போது, “இக்கோயிலில் வந்து வேண்டுதல் வைத்து விட்டு சென்று அது நிறைவேறி பிறகு காணிக்கையாக இங்கு வேல்கள் கொண்டு வைப்பது வழக்கம். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த ஒன்று.

    எங்களது கட்டுபாட்டில் கோயில் வந்த பிறகு ஆலயத்தை பராமரிப்பு செய்து கோயிலின் பழமை மாறாமல் கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்தார்.

    செய்தியாளர்: சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Suresh V
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி