Home /News /local-18 /

நாமக்கல் : பண்ணாரி அம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்!

நாமக்கல் : பண்ணாரி அம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்!

நாமக்கல்: பண்ணாரி அம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்!

நாமக்கல்: பண்ணாரி அம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டையம்புதூர் இருந்து பக்தர்கள் மற்றும் குழுவினர், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் 48 நாட்கள், 24 நாட்கள், 12 நாட்கள், 6 நாட்கள் என மாலை அணிவித்து விரதம் இருந்தும் அன்னதானம் வழங்கி, பண்ணாரி அம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.

மேலும் படிக்கவும் ...

    இதனிடையே இந்தாண்டும் , 37-வது ஆண்டு தொடர்ச்சியாக மாலை அணிவித்தும் விரதம் இருந்தும் பண்ணாரி அம்மன் கோயிலுக்கு, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.

    இப்பகுதியிலிருந்து வருடாவருடம் பக்தர்கள் குழு அமைத்து பாதயாத்திரையாக செல்வார்கள். இதில் ஊரில் உள்ள திரளான மக்களும் மாலை அணிவித்து செல்வது வழக்கமான ஒன்று. ஏனென்றால் நடைபயணமாக சென்றால் நினைத்த காரியங்கள் நிறைவேறும், வீட்டில் உள்ள பிரச்சனைகளில் தீர்வு ஏற்படும்,
    குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாதயாத்திரையாக செல்கிறார்கள்.

    மேலும் இதுபோன்று நீண்ட தூரம் மனதில் பக்தியுடன் பாதயாத்திரையாக வந்தால் உடல்நலம் ஆரோக்கியத்துடன் இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Vijay R
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி