நாமக்கல்: வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

வாக்கு இயந்திரப் பணி

நாமக்கலில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னம் பொறுத்தும் பணி நடைபெறுகிறது.

  • Share this:
    நாமக்கல்லில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது.
    தமிழகம் முழுவதும் வருகின்ற 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவுள்ளது. நாமக்கல் தொகுதியில் 15 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் 11 சுயேட்சை வேட்பாளர்கள் என 26 வேட்பாளர்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் அவர்களுடைய சின்னம் ஆகியவை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி இன்று தொடங்கியது. நாமக்கல் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இந்தப் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணிகள் அனைத்தும் வேட்பாளர்களின் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
    Published by:Karthick S
    First published: