குமாரபாளையம் திமுக வேட்பாளரின் நண்பர் வீட்டில் இருந்து ரூ 35 லட்சம் பறிமுதல்!

குமாரபாளையம் திமுக வேட்பாளரின் நண்பர் வீட்டில் இருந்து ரூ 35 லட்சம் பறிமுதல்!

பணம் வழங்குதல்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் திமுக வேட்பாளர் வெங்கடாச்சலத்தின் நண்பர் வீட்டில் இருந்து, 35 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனால், தேர்தலில் போட்டியிடும் பலரது வீடுகளிலும் தகவல்களின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர், இந்த நிலையில், குமாரபாளையம் திமுக வேட்பாளர் வெங்கடாச்சலத்தின் நண்பர்கள் வீட்டில் பணம் பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

  அதன் பேரில் வெடியரசம்பாளையத்தில் உள்ள வெங்கடாச்சலத்தின் நண்பர் செங்கோட்டையன் வீட்டிலும் அவரது மகன் வெங்கடாச்சலம் வீட்டிலும், நேற்று மாலை முதல் இன்று காலை வரை வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்தினர். அதில் 35 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

  செங்கோட்டையனும், அவரது மகனும் பத்துக்கும் மேற்பட்ட நூல் மில்கள் நடத்தி வரும் நிலையில், அதற்காக வைக்கப்பட்டிருந்த பணம் என கூறப்படுகிறது. பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள், உரிய ஆவணங்களை அளித்து பெற்றுக் கொள்ளுமாறு கூறி எடுத்துச் சென்றனர். இதே போன்று, வேட்பாளர் வெங்கடாச்சலத்தின் நண்பரான, ஒட்டமெத்தை பகுதியில் உள்ள சங்கர் என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அங்கு பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
  Published by:Ram Sankar
  First published: