அமைச்சர் உதயகுமாரின் தந்தை உயிரிழப்பு: துணை முதல்வர் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி

ஆர்.பி.உதயகுமாரின் தந்தை

அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தந்தை உடல்நல குறைவு காரணமாக நேற்று உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தனர்

 • Share this:
  அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தந்தை உடல்நல குறைவு காரணமாக நேற்று உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தனர்.

  தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தந்தை ஆர்.போஸ் கடந்த சில நாட்களாக உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

  மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சைப்பலனின்றி போஸ் நேற்று உயிரிழந்தார்.  அவரது உடல்  திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூர் எம்ஜிஆர், ஜெயலலிதா கோவில் வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க.. சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு கொரோனா பாதிப்பு

  உடலுக்கு தமிழக அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக பிரமுகர்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  அமைச்சர் உதயக்குமாரின் தந்தை உடலுக்கு  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.

  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடன் இருந்தார். தொடர்ந்து அமைச்சரின் தந்தையான போஸ் உடல்  ஜெயலலிதா கோவில் வளாக பகுதியிலேயே நல்லடக்கம் செய்யப்படுகிறது.

  Must Read:  மருத்துவர்கள் பணிசுமையை குறைக்க ராமதாஸ் அறிவுறுத்தல்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: