10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை பற்றி மிகவும் பிற்படுத்தபட்ட சமூகத்தினர் பயப்பட தேவையில்லை - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அமைச்சர் வேலுமணி பிரச்சாரம் மேற்கொண்டு இருந்த போது, உள் இட ஒதுக்கீடு குறித்து தொண்டர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை பற்றி மிகவும் பிற்படுத்தபட்ட சமூகத்தினர் பயப்பட தேவையில்லை எனவும் அனைத்து பிரிவினருக்கும் உரிய ஒதுக்கீடு வழங்கப்படும், முதல்வரிடம் பேசி அதை நான் பெற்றுதருவேன் என கோவையில் பிரச்சாரத்தின் போது அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களுக்கு மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. முறையான கணக்கெடுப்பு நடத்தாமல் வழங்கப்பட்ட உள் இட ஓதுக்கீட்டுக்கு எதிராக போராட்டங்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்று முன் தினம் கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியில் அமைச்சர் வேலுமணி பிரச்சாரம் மேற்கொண்டு இருந்த போது, உள் இட ஒதுக்கீடு குறித்து தொண்டர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

Also read... கலைச்சேவை செய்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு மக்களுக்கு சேவை செய்யவே நானும், கமலும் அரசியலுக்கு வந்துள்ளோம் - சரத்குமார்

அப்போது பேசிய அமைச்சர் வேலுமணி, 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை பற்றி மிகவும் பிற்படுத்தபட்ட சமூகத்தினர் பயப்பட தேவையில்லை எனவும் அனைத்து பிரிவினருக்கும் உரிய ஒதுக்கீடு வழங்கப்படும், அதை நான் பெற்றுதருவேன் என பொது மக்களிடம் அமைச்சர் வேலுமணி வாக்குறுதி அளித்தார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: