• HOME
  • »
  • NEWS
  • »
  • local-18
  • »
  • ஃபாரின் மாடு பாலைக் குடித்து பெண்களெல்லாம் ‘பேரல்’ போல் ஆகிவிட்டனர்: திண்டுக்கல் லியோனி பேச்சுக்கு காயத்ரி ரகுராம் கண்டனம்

ஃபாரின் மாடு பாலைக் குடித்து பெண்களெல்லாம் ‘பேரல்’ போல் ஆகிவிட்டனர்: திண்டுக்கல் லியோனி பேச்சுக்கு காயத்ரி ரகுராம் கண்டனம்

திண்டுக்கல் ஐ. லியோனி

திண்டுக்கல் ஐ. லியோனி

திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரான பட்டிமன்ற புகழ் திண்டுக்கல் லியோனி தேர்தல் பிரச்சாரத்தின் போது, வெளிநாட்டு பசுக்களின் பாலைக் குடித்துக் குடித்து பெண்களின் இடுப்பு பெருத்துப் போய் பேரல் போல் ஆகிவிட்டனர் என்று பேசியது சர்ச்சையாகியுள்ளது.

  • Share this:
    திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரான பட்டிமன்ற புகழ் திண்டுக்கல் லியோனி தேர்தல் பிரச்சாரத்தின் போது, வெளிநாட்டு பசுக்களின் பாலைக் குடித்துக் குடித்து பெண்களின் இடுப்பு பெருத்துப் போய் பேரல் போல் ஆகிவிட்டனர் என்று பேசியது சர்ச்சையாகியுள்ளது.

    லியோனியின் இந்தப் பேச்சு வீடியோவாக வெளியாக நெட்டிசன்களிடம் வகையாகச் சிக்கியுள்ளார். இதற்கு பாஜகவைச் சேர்ந்த நடிகை, காயத்ரி ரகுராம் கடும் கண்டனங்களை பதிவிட்டுள்ளார்.

    கோவை, தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட திண்டுக்கல் லியோனி பேசியதாவது:

    இன்றைக்கு கோயமுத்தூரோட குடிதண்ணீர்தான் எல்லாருக்கும் பிடிக்கும். சிறுவாணித் தண்ணீர், ஆனால் இன்றைக்கு அந்த தண்ணீர் கோயமுத்தூர்ல இருப்பவர்களுக்கு போதவில்லை.



    எல்லோருக்கும் தண்ணீர் கொண்டு வர திட்டத்துக்கு இன்றைக்கு பெரிய தடையாக இருப்பவர் இன்றைய உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அந்த ஊழல் மணியின் அராஜகத்துக்கு அடிக்கப் போகிறார் கார்த்தி சிவசேனாதிபதி சாவுமணி.

    இவர் என்ன செய்தாரென்று நீங்கள்ளாம் பார்த்திருப்பீர்கள். மாடுகளில் பலவகை உண்டு. பண்ணையில இருக்கற மாடுகளைப் பார்த்திருக்கிறீங்களா, ஃபாரின் மாடு, அத மெஷின்ல வச்சுத்தான் பால் கறப்பாங்க. அந்தப் பாலக் குடிச்சு குடிச்சுத்தான் நம்ம பெண்கள் பலூன் மாதிரி ஊதிப்போய் விட்டார்கள். ஒரு காலத்துல பெண்கள் இடுப்பு 8 மாதிரி இருக்கும். பிள்ளைய தூக்கி இடுப்புல வச்சா உட்கார்ந்து கொள்ளும்.

    பாரின் மாடு ஒரு மணி நேரத்துல 40 லிட்டர் பால் கறக்கும், ஆனால் அதைக் குடிச்சோம்னா பெரிசா ஊதிப்போக வேண்டியதுதான். 8 மாதிரி இருந்த பெண்கள் இடுப்பு இன்று பேரல் மாதிரி பெருத்துப் போய் கிடக்கிறது. பிள்ளைய தூக்கி இடுப்புல வச்சா வழுக்கி ஓடிடுது. ஆண் பிள்ளைகளெல்லாம் இவ்வளவு பெரிசா ஆகிட்டாங்க. ஆனால் நாட்டு மாடு, தாய்ப்பாலுக்கு அடுத்து சுத்தமான பால் நம்ம நாட்டு மாடு பால்தான். அந்த நாட்டு மாடுகளை காப்பாற்ற மாபெரும் இயக்கம் நடத்தியர்வர்தான் கார்த்தி சிவசேனாதிபதி.

    இவ்வாறு பேசியுள்ளார் திண்டுக்கல் லியோனி.

    இது தொடர்பாக கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ள பாஜக-வைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் தன் சமூகவலைத்தளப்பக்கத்தில், லியோனி பேசிய வீடியோவைப் பதிவிட்டு கூறியதாவது:

    “என்ன ஒரு வெட்கக் கேடு? அவர் என்ன பால் குடிக்கிறார்? குழந்தைப் பேற்றுக்குப் பின் ஒரு பெண்ணின் உடலில் அடையும் மாற்றங்கள் பற்றி அவருக்குத் தெரியுமா? அல்லது ஹார்மோன் மாற்றங்களின் போது ஏற்படும் மாற்றங்கள்தான் தெரியுமா? இத்தகைய ஆணாதிக்க மனோபாவ நபர்கள் குறித்து கனிமொழி என்ன கூற விரும்புகிறார்? இதுதான் உங்கள் கட்சி பெண்கள் மீது வைத்திருக்கும் மரியாதையா?” என்று சாடியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: