வெள்ளக்கிணறு பகுதியில் நீரின்றி பாலைவனம் போல் மாறும் குட்டைமேடு

வெள்ளக்கிணறு பகுதியில் நீரின்றி பாலைவனம் போல் மாறும் குட்டைமேடு

கோயம்புத்தூர் வெள்ளைக்கிணறு

கோயம்புத்தூர் வெள்ளக்கிணறு பகுதியிலுள்ள குட்டைமேடு நீரின்றி பாலைவனம் போல் மாறி வருகிறது. 

 • Share this:
  கோடைக் காலம் வந்துவிட்டாலே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது, இந்நிலையில், முழுமையான நீர்த்தேக்கமாக இருந்த குட்டைமேட்டில், கடந்த 20 வருடங்களாகக் குறைவாகவே நீர்  காணப்படுகிறது.

  இதுகுறித்து அப்பகுதி மக்கள் நம்மிடம், " 20 வருடங்களுக்கு முன் மழைக்காலங்களில் குருடி மலைப் பகுதியிலிருந்து வரும் மழை நீர் தடாகம், காளப்பநாயக்கன் பாளையம்,  மருதமலை வழியே வெட்டிவைத்த வாய்க்கால்கள் மூலம் குட்டைமேடு பகுதியை வந்து சேரும்.

  இதனால், குட்டைமேடு சுற்றியுள்ள கிணறு, குடியிருப்புப் பகுதியில் விவசாய நிலங்களுக்கு நீர் விநியோகம் வருடம் முழுவதும் தடையின்றி கிடைத்தது. ஆனால், கடந்த 20 வருடங்களாக  நீர்த்தேக்கம் இல்லாத காரணத்தினால் குட்டைமேடு சுற்றியுள்ள பகுதிகளில் கிணற்றில் நீர் ஊறுவது  தடைப்பட்டுள்ளது. மேலும்,  குட்டை அருகில் ஆழ்துளைக் கிணறு அமைத்தாலும் நிலத்தடிநீர் ஊற்று மிகக்  குறைவாக இருக்கிறது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

  சமீபத்தில், அரசாங்கத்தினர் குட்டையை ஆழப் படுத்தியதால், மழை பெய்யும் நேரத்தில், 6 மாதத்திற்கு நீர்த் தேக்கம் இருப்பதாகவும் அடுத்த 6 மாதத்திற்கு வறட்சியாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.

  மேலும்,  20  வருடங்களாகத்  துண்டிக்கப்பட்டிருக்கும் மழைநீர் வாய்க்கால்களை அரசாங்கம் சீரமைத்தால் அப்பகுதி மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று கோரிக்கைவைக்கிறார்கள்.
  Published by:Karthick S
  First published: