Home /News /local-18 /

கோவை: வாகன ஓட்டிகளை தடுமாற வைக்கும் தடாகம் சாலை

கோவை: வாகன ஓட்டிகளை தடுமாற வைக்கும் தடாகம் சாலை

கோவை: வாகன ஓட்டிகளை தடுமாற வைக்கும் தடாகம் சாலை

கோவை: வாகன ஓட்டிகளை தடுமாற வைக்கும் தடாகம் சாலை

கோவையில் பிரதான சாலைகளில் ஒன்றான தடாகம் சாலை  சிதிலமடைந்து, ஆங்காங்கே  குண்டும் குழியுமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர்.

    கோவையில் பிரதான சாலைகளில் ஒன்றான தடாகம் சாலை சிதிலமடைந்து, ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர்.

    கடந்த ஒரு வருட காலமாக அவ்வப்போது பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகளும், மேன்ஹோல் சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வந்தன. பணிகள் முடிவடைந்த பிறகு முழுமையாக புதிய சாலை அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இன்றுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தற்காலிக நடவடிக்கையாக சேதமடைந்த பகுதியில் மட்டும் தார் சாலை போடப்பட்டது.

    ஆங்காங்கே சாலை சமமான நிலையில் இல்லாதவாறு, கிழிந்த துணியை தைத்து ஒட்டு போடுவது போல் காட்சியளிக்கின்றன. அவிலா கான்வென்டில் தொடங்கி, இடையர்பாளையம் பேருந்து நிறுத்தம் வரை, சுமார் 2 கிலோமீட்டர்களுக்கு சாலை இவ்வாறு மோசமாக உள்ளது. நீண்ட நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டதால், தார் சாலையில் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

    சீராக இல்லாத சாலையால், வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துக்குள்ளாகிறார்கள். அதிகாரிகள் இதற்கான நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

    செய்தியாளர்: க.ராஜ்குமார்-கோவை
    Published by:Murugesh M
    First published:

    Tags: Coimbatore

    அடுத்த செய்தி