Zoom செயலியை கண்டுபிடித்தவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ராயல்டி கொடுக்க வேண்டுமென்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.அண்ணா அறிவாலயத்திற்கு வந்த ஸ்டாலின், கட்சியின் சில மூத்த நிர்வாகிகள் மற்றும் சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் பங்கேற்றார். அங்கிருந்து zoom ஆப் மூலமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
முதன்முறையாக கட்சியின் பொதுக்குழு இணையவழியில் நடைபெற்றது இதுவே முதல் முறை. 67 இடங்களில் இருந்து 3 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் zoom ஆப் மூலமாக இதை பார்த்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, Zoom ஆப் கண்டுபிடித்தவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உரிய ராயல்டி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.ஒரு பிரதான கட்சியின் பொதுக்குழுவை நடத்தியதால் Zoom ஆப் கண்டு பிடித்தவர்களுக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை அவர் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
ஊரடங்கு காலத்தில் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் கூட்டங்களையும் ஆலோசனைகளையும் இந்த ஆப் மூலமாக அவர் வழங்கியிருக்கிறார். 250க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை திமுக தலைவர் Zoom ஆப் மூலமாக நடத்தி இருக்கிறார். தானும் இந்த ஆப் மூலமாக பல்வேறு கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் இதை கண்டுபிடித்தவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ராயல்டி கொடுக்க வேண்டுமென்று உதயநிதி பேசிய போது அரங்கத்தில் இருந்த அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
Published by:Vijay R
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.