ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

ஜொமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் கஞ்சன் பட்டிடார் திடீர் ராஜினாமா!

ஜொமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் கஞ்சன் பட்டிடார் திடீர் ராஜினாமா!

கஞ்சன் பட்டிடார்

கஞ்சன் பட்டிடார்

ஜொமேட்டோ நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைமை அதிகாரியான கஞ்சன் பட்டிடார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கால் வளர்ந்த நிறுவனங்களில் முக்கியமான ஒன்று ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள். அதில் ஜொமேட்டோ நிறுவனம் மிகவும் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. ஜொமேட்டோவில் ஆண்டிற்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது. அந்த அளவிற்கு நம்பகமான சேவையை வழங்குகிறது ஜெமோட்டோ. ஜொமேட்டோவின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அந்த நிறுவனத்தின் துல்லியமான தொழில்நுட்ப சேவை.

ஜொமேட்டோவின் துல்லியமான தொழில்நுட்ப சேவைக்கு முக்கிய காரணம் அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப பிரிவு அதிகாரியான கஞ்சன் பட்டிடார். இவர் ஜொமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனரும் கூட . அவர் இப்போது அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் பதவி விலகலுக்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை. இந்த நேரத்தில் கஞ்சன் பட்டிடார் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். கஞ்சன் ஜெமேட்டோ நிறுவனத்தின் ஆரம்ப கட்ட தொழிலாளர்களில் ஒருவர். அதோடு அந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப சேவை பிரிவுக்கு பொறுப்பேற்றவர். ஜொமேட்டோ நிறுவனத்தின் துல்லியமான தொழில் நுட்ப சேவை கிடைப்பதற்கு இவரின் பங்கு மிக முக்கியமானது. தான் பதவி விலகும் வரை ஜொமேட்டோ நிறுவனத்தின் தொழில்நுட்ப சேவையை பழுதில்லாமல் மிகத்திறமையாக கையாண்டவர். ஜொமேட்டோ நிறுவனத்தில் கஞ்சன் இணைவதற்கு முன்பு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். டெல்லி ஐஐடியில் கஞ்சன் பிடெக் படிப்பு முடித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் ஜொமேட்டோ நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனரான மோஹித் குப்தா தனது பதவியில் இருந்து விலகினார். குப்தா ஜொமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்றினார். கடந்த ஆண்டு ஜொமேட்டோ நிறுவனம் தனது முக்கியமான அதிகாரிகள் சிலரை இழந்துள்ளது. புதிய வரவுகள் பிரிவின் தலைமை அதிகாரி ராகுல் கஞ்சு, துணை தலைவராக இருந்த சித்தார்த் ஜவஹர், மற்றொரு இணை நிறுவனராக இருந்த கவுரவை் குப்தா ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள்.

தனது போட்டி நிறுவனமான ஸ்விக்கியுடன் தொழில்நுட்பம், தரம், நம்பிக்கை மற்றும் துல்லிய டெலிவரி என பல வகைகளில் ஜொமேட்டோ நிறுவனம் போட்டியிட்டு வளர்ச்சியடைந்துள்ளது. சில சர்ச்சைகளுக்குள் சிக்கினாலும் இன்றும் ஜொமேட்டோ தனது வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கிறது. அதனால் தான் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறார்கள். கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு ஏற்படுவதற்கு முன்னாள் சர்வதேச உணவு டெலிவரி நிறுவனங்கள் இந்தியாவில் கோலோச்சி வந்தன. ஆனால் தற்போது ஆன்லைன் உணவு டெலிவரி தொழிலில் இந்திய நிறுவனங்களே கொடிகட்டி பறக்கின்றன.

First published:

Tags: Zomato