முகப்பு /செய்தி /Breaking and Live Updates / சித்தார்த்தால் கைதான பத்மநாபன் - நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்!

சித்தார்த்தால் கைதான பத்மநாபன் - நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்!

நினைத்தாலே இனிக்கும் சீரியல்

நினைத்தாலே இனிக்கும் சீரியல்

தமன்னா செய்த சூழ்ச்சியால் கைதான பத்மநாபன், நினைத்தாலே இனிக்கும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நினைத்தாலே இனிக்கும். பத்மநாபன் ஏற்கனவே கோபமாக இருக்க இந்த நேரத்தில் கடை திறந்துள்ள பொம்மியை பற்றி ரகுவரன் ஏற்றி விட நான் நினைச்சா அந்த கடையே இருக்காது என வார்த்தையை விடுகிறார்‌.

இந்த விஷயத்தை ரகுவரன் நளினி மற்றும் தமன்னாவிடம் சொல்ல இருவரும் ஆள் வைத்து கணபதி ஸ்வீட்ஸ் கடையை அடித்து நொறுக்க அந்த பழி பத்மநாபன் மீது விழ சித்தார்த் போலிஷில் புகாரளிக்க அவர் கைது செய்யப்படுகிறார். இதனால் இதுவரை ஆதரவாக இருந்த அஞ்சலி பாட்டி உட்பட எல்லோரும் பொம்மிக்கு எதிராக திரும்புகின்றனர்.

பொம்மி பத்மநாபன் மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்க சொல்லியும் சித்தார்த் முடியாது என உறுதியாக கூறிவிடுகிறான். சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் ஜாமினிலும் எடுக்க முடியாத சூழல் உருவாகிறது. திங்கட்கிழமை கோர்ட்டில் பத்மநாபன் செய்த சிலவற்றை பற்றி கேட்க பொம்மி ஆமாம் என சொல்ல சித்தார்த் தனது அப்பாவை பற்றி தவறாக சொல்ல பத்மநாபன் நான் தான் கடையை உடைச்சேன் என கூறி விடுகிறார்.

Also read... மதுரைக்கு போன அமுதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

இந்த நிலையில் பொம்மி கோவிலுக்கு போக அவரை பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுக்க அவள் எதேச்சையாக சொன்ன விஷயம் மீண்டும் வீட்டில் பிரச்சனையாக வெடிக்கிறது. இதனால் எல்லோரும் பொம்மியை திட்ட நீங்க கேஸை வாபஸ் வாங்காமல் நான் கீழே வர மாட்டேன் என கொட்டும் மழையில் நனைகிறாள். பிறகு சித்தார்த் கேஸை வாபஸ் வாங்க கோர்ட்டுக்கு செல்ல அப்போது நேத்ரா நான் தான் கடையை உடைத்தேன் என சொல்ல பத்மநாபன் வெளியே வருகிறார்.

வெளியே வரும் பத்மநாபன் எதிரிகளின் சூழ்ச்சியால் அவர்கள் பக்கம் சாய்ந்தது மட்டுமின்றி சவால் ஒன்றையும் விடுகிறார். அது என்ன சவால்? அடுத்து என்ன நடக்கப் போவது என்ன  என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv