• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • YouTube: யூடியூபர் மீது பண மோசடி புகார் - தற்கொலைக்கு முயன்ற பாபா!

YouTube: யூடியூபர் மீது பண மோசடி புகார் - தற்கொலைக்கு முயன்ற பாபா!

யூடியூபர்

யூடியூபர்

கந்தப் பிரசாத்தின் புகார் சோஷியல் மீடியாக்களில் பெரும் கவனத்தை பெற்றது.

  • Share this:
டெல்லியில் பாபா கி தாபா உரிமையாளர் கொடுத்த பண மோசடி புகாரின் அடிப்படையில் யூடியூபர் கவுரவ் வாசன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் அலை உச்சக்கடத்தை எட்டத் தொங்கியது. இதனைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருந்ததால், பிரதமர் மோடி திடீரென ஊரடங்கை அறிவித்தார். இந்த ஊரடங்கால் உணவக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக சாலையோர கடைகள் வைத்திருந்தவர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியது. டெல்லியில் 'பாபா கா தாபா' உணவகம் நடத்தி வந்த கந்தபிரசாத், ஊரடங்கால் பாதிக்கப்பட்டது குறித்து பிரபல யூடியூப்பரான கவுரவ் வாசன் சேனலில் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்தியா முழுவதும் டிரெண்டான இந்த வீடியோவைத் தொடர்ந்து பலரும் கந்தபிரசாத் தம்பதிக்கு உதவ முன் வந்தனர். யூடியூப்பர் கவுரவ் வாசனும் பொதுவெளியில் கந்தபிரசாத் தம்பதிக்காக நிதித் திரட்ட தொடங்கினார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் கந்த பிரசாத் டெல்லி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது குறித்து வீடியோ எடுத்து யூடியூப் தளத்தில் பதிவிட்ட கவுரவ் வாசன், தனக்காக உதவ முன் வந்தவர்களிடம் நிதியை பெற்று எனக்கு கொடுக்கவில்லை எனப் புகார் அளித்தார்.

பெருமளவு பணம் வசூலித்த கவுரவ் வாசன் 2 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்ததாகவும், எஞ்சிய பணத்தை அவரே வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். கந்தப் பிரசாத்தின் புகார் சோஷியல் மீடியாக்களில் பெரும் கவனத்தை பெற்றது. காவல்துறையினரும் அவரின் வழக்கை பதிவு செய்து கவுரவ் வாசன் குறித்து விசாரிக்கத் தொடங்கினர். நிதி திரட்டிய ஆதாரங்கள் மற்றும் கந்தபிரசாத்துக்கு பணம் கொடுத்த விவரம் என அனைத்தையும் தோண்டித் துருவினர். அதில், கந்த பிரசாத் கொடுத்த புகாரில் உண்மை இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

Also read... Realme GT: தீபாவளிக்கு முன்னதாக அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்!

இது குறித்து விளக்கமளித்துள்ள டெல்லி காவல்துறை, கந்தபிரசாத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக பணம் வசூலித்த யூடியூபர் கவுரவ் வாசன், அந்த பணத்தை முறையாக அவரிடம் கொடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்து கந்தப் பிரசாத் புகார் கொடுத்த பிறகே எஞ்சிய 4.5 லட்சம் ரூபாயை கவுரவ் வாசன் திருப்பிக் கொடுத்ததாகவும், வங்கிக் கணக்கு விவரங்களை ஆய்வு செய்தபோது இந்த விஷயங்கள் தெரிய வந்ததாக கூறியுள்ளது.

இதனிடையே, தன்னார்வலர்கள் கொடுத்த நிதி மூலம் கடை ஒன்றை தொடங்கிய பாபா கா தாபா உணவக உரிமையாளர் கந்த பிராசத், மீண்டும் நஷ்டத்தை சந்தித்துள்ளார். இதனால், புதிய கடையை இழுத்து மூடிய அவர், ஏற்கனவே இருந்த கடையை தொடர்ந்து நடத்தி வந்துள்ளார். அதிலும் எதிர்பார்த்த வருமானம் இல்லாததால், மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இது குறித்தும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: