என்ன ஒரு ‘சீப்’ செலக்‌ஷன்?- ரசிகர்கள் கொந்தளிப்பு

பாகிஸ்தான் அணி.

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட பாகிஸ்தான் அணி குறித்து ரசிகர்கள் கடும் விமர்சனத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

 • Share this:
  வரலாற்றிலேயே மிகவும் மோசமான அணித்தேர்வு என்று ரசிகர்கள் பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை அணித்தேர்வை விமர்சித்து வருகின்றனர். ஷோயப் மாலிக், வகாப் ரியாஸ், முகமது ஆமிர், சர்பராஸ் அகமது ஆகியோரை தேர்வு செய்யவில்லை. பாபர் ஆஸம் தலைமை அணியில் 40 வயது ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ் இடம்பெற்றுள்ளார்.

  15 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணியில் மிடில் ஆர்டர் வீரர் ஆசிப் அலி மற்றும் குஷ்தில் ஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, இவர்கள் தேர்வுக்கான காரணம் இல்லை, என்றும் இவர்களை தேர்வு செய்ததற்குரிய தகுந்த நம்பர்கள் அவர்களிடத்தில் இல்லை என்றும் அங்கு சர்ச்சை எழுந்துள்ளது. மிகவும் கண்டனத்துக்குரிய வகையில் பகர் ஜமான் மற்றும் சர்பராஸ் அகமெட் ஆகியோர் ஒதுக்கப்பட்டுள்ளனர் என்பதே.

  அசிப் அலி தேர்வு மீது ஏன் இவ்வளவு காட்டம் 29 போட்டிகளில் 16.38 என்றுதான் சராசரி வைத்துள்ளார். இடது கை வீரரான குஷ்தில் ஷா 9 போட்டிகளில் 21 சராசரி வைத்துள்ளார். மேலும் ஷோயப் மாலிக், வகாப் ரியாஸ், முகமது ஆமிர் போன்ற வீரர்களைத் தேர்வு செய்யாதது கடும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. மிஸ்பா உல் ஹக், வக்கார் யூனிஸ் தங்கள் பயிற்சியாளர் பொறுப்பை உதறிவிட்டனர்.

  குறிப்பாக ஷோயப் மாலிக், ஷர்ஜீல் கான், ஃபகர் ஜமான், பாஹிம் அஷ்ரப், ஹைதர் அலி போன்ற பவர் ப்ளேயர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். அசாம் கான் என்பவரை ஏன் தேர்வு செய்ய வேண்டும்? முன்னாள் விக்கெட் கீப்பர் மொயின் கானின் மகன் என்பதாலா என்று அங்கு கொந்தளிக்கின்றனர். ஆசிப் அலி என்ன ரன்கள் எடுத்து விட்டார் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று கொதிப்படைந்துள்ளனர்.

  Also Read: உலகக்கோப்பை டி20: இந்தியாவுடன் மோதும் பாகிஸ்தான் அணி அறிவிப்பு

  சில நெட்டிசன்கள் கிண்டலின் உச்சத்திற்குப் போய், ஆசிப் அலி மருத்துவமனையில் அனுமதி, தான் பாகிஸ்தான் அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்து அதிர்ச்சி என்று கிண்டலடிக்கின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: