"மிக்ஸ் அண்ட் மேட்ச்" கோவிட் தடுப்பூசிகள் என்றால் என்ன? இது பயனுள்ளதா? தெரிந்து கொள்ளுங்கள்

தடுப்பூசி

இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் கோவிட் தடுப்பூசிக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன

  • Share this:
கோவிட்-19 வைரஸின் இரண்டாம் அலை காரணமாக ஏற்பட்ட பெரும் உயிர் சேதங்களுடன் இந்தியா இன்னும் போராடி கொண்டிருக்கிறது. சமீப நாட்களில் தொற்று பாதிப்புகள் குறைந்தாலும் கூட, இன்னும் இரண்டாம் அலையின் பிடியில் தான் இந்தியா சிக்கி உள்ளது. தொற்றை எதிர்த்து நாடு போராடி வரும் வேளையில் ஏற்பட்டுள்ள தடுப்பூசி பற்றாக்குறை மற்றொரு சவாலாக உள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் கோவிட் தடுப்பூசிக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன.

தடுப்பூசி பற்றாக்குறையை சமாளிக்க அல்லது செயல்திறனை அதிகரிக்க பல நாடுகளில் வெவ்வேறு கோவிட் தடுப்பூசிகளை மிக்ஸ் செய்யும் (mix and match- மிக்ஸ் அண்ட் மேட்ச்) நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. தடுப்பூசி பற்றாக்குறையை சமாளிக்க இந்த நாடுகளை இந்தியா பின்பற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மிக்ஸ் அண்ட் மேட்ச் தடுப்பூசி என்றால் என்ன.?

இந்தியாவில் தற்போது வரை கோவிட் தொற்றுக்கு எதிராக கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பெருமளவில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பூசிகளின் 2 டோஸ்களையும் போட்டு கொண்டவர்கள் மட்டுமே தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் என்று கருதப்படுகிறார்கள். ஆனால் சமீபத்தில் கோவிட் தடுப்பூசிகளை "மிக்ஸ் அண்ட் மேட்ச்" செய்வதற்கான சாத்தியங்கள் பற்றி நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

"மிக்ஸ் அண்ட் மேட்ச்" என்பதன் அர்த்தம் என்னவென்றால் உதாரணமாக ஒருவர் கோவிட் தொற்றுக்கு எதிராக ஏற்கனவே கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்ற பிறகு, பயன்பாட்டில் உள்ள வேறு தடுப்பூசியை இரண்டாவது டோஸாகப் பெற முடிவு செய்து அதை தொடர்ந்து வேறு தடுப்பூசி பூஸ்டரை போட்டு கொள்வதை குறிக்கிறது. இது தடுப்பூசிகளின் காக்டெய்லை சித்தரிக்கிறது. இது பயனுள்ளதாக நிரூபிக்கப்படலாம் அல்லது பயனுள்ளதாக நிரூபிக்கப்படாமலும் போகலாம். சந்தையில் புதிய தடுப்பூசி கிடைப்பது பற்றிய அறிக்கைகளை பொறுத்தவரை, வேறு இரண்டு தடுப்பூசிகளைக் கலப்பது ஒரு விருப்பமா என்பதையும், நீண்ட காலத்திற்கு இது பயனுள்ளதா இல்லையா என்பதையும் மக்கள் அறிய விரும்புகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த முறை எவ்வாறெல்லாம் பயனளிக்கும்.?

மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோவிட் தடுப்பூசிகள் பற்றாக்குறை தீவிர இரண்டாம் அலை நீடிக்கும் இந்த நேரத்தில் நிச்சயமாக நாட்டிற்கு மற்றொரு சவாலாக மாறியுள்ளது. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் தடுப்பூசி போட்டு கொள்வதற்கான இடங்களைக் கண்டுபிடிக்க இன்னும் பெரும்பாலான மக்கள் சிரமப்படுவதால், கோவிட் தடுப்பூசிகளை மிக்ஸ் அண்ட் மேட்ச் செய்வது சவால்களை சமாளிக்க உதவலாம்.

இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியாளர்கள், அதிகளவில் மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை தயாரித்து வழங்க முடியமால் திணறி வருகின்றனர். இந்த நேரத்தில் மிக்ஸ் அண்ட் மேட்ச் தடுப்பூசி முறை ஆபத்தின்றி மக்களுக்கு உண்மையில் பலனளிக்குமானால் தடுப்பூசிக்கான டிமாண்ட்களை நிறைவேற்றுவதற்கான சுமை உலகளவில் வெவ்வேறு தடுப்பூசி உற்பத்தியாளர்களிடையே பிரித்து தரப்படும்.

அப்படி செய்யபட்டால் இது அதிக தடுப்பூசி விநியோகத்தை உறுதி செய்யும் வாய்ப்பாக அமையும். கூடுதலாக, இந்த வகை தடுப்பூசி அளவுகளும் வெவ்வேறு வைரஸ் வகைகளுக்கு எதிராக அதிக செயல்திறனை உறுதி செய்யக்கூடும். உதாரணமாக முதல் டோஸில் போட்டு கொண்ட ஒரு குறிப்பிட்ட தடுப்பூசி வேரியன்ட் வைரஸுக்கு எதிராக குறைந்த செயல்திறன் கொண்டதாக இருந்தால், வேரியன்ட்டுக்கு எதிராக அதிக செயல்திறனைக் கொண்டிருக்கும் வேறு ஒரு பூஸ்டர் ஷாட்டை இரண்டாவது டோஸில் பெற்று கொள்ளலாம்.

இது பாதுகாப்பானதா & பயனுள்ளதா..?

பல ஐரோப்பிய நாடுகள் மிக்ஸ் அண்ட் மேட்ச் தடுப்பூசி அட்டவணைகளை பயன்படுத்துகின்றன. ஜெர்மனி, பிரான்ஸ், சுவீடன், நோர்வே மற்றும் டென்மார்க் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை முதல் டோஸாக போட்டு கொண்டவர்கள் வேறு மாற்று தடுப்பூசியை தங்கள் இரண்டாவது டோஸாக எடுத்து கொள்ளுமாறு அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர். தவிர தேசிய தடுப்பூசி திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதை உறுதி செய்ய கோவிட் -19 தடுப்பூசிகள் மிக்ஸ் அண்ட் மேட்ச் முறை செயல்படுத்தப்படும் என்று கனேடிய சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஸ்பானிஷ் ஆய்வு ஒன்றில், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் முதல் டோஸைத் தொடர்ந்து, இரண்டாவது டோஸாக ஃபைசர் ஷாட்டைப் பெற்ற நபர்களுக்கு 14 நாட்களுக்குப் பிறகு அதிக ஆன்டிபாடி ரெஸ்பான்ஸ் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் ஆய்வக சோதனைகளில் இந்த ஆன்டிபாடிகள் SARs-COV-2 வைரஸை கண்டறிந்து செயலிழக்கச் செய்துள்ளன என்பதை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, கோவிட் தடுப்பூசிகள் மட்டுமே வைரஸிலிருந்து தற்காத்து கொள்ள இருக்கும் முக்கிய வழியாகும். ஆனால் மேற்கண்டவாறு கோவிட் தடுப்பூசிகளை "மிக்ஸ் அண்ட் மேட்ச்" செய்வது சாத்தியமா.! பலன் அளிக்குமா.!இல்லையா என்பது இந்தியாவில் இன்னும் பரிசீலிக்கப்படவில்லை.

 
Published by:Vijay R
First published: