கரும்பூஞ்சையைத் தொடர்ந்து இந்தியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வெள்ளை பூஞ்சை பாதிப்பு - அச்சத்தில் மருத்துவர்கள்

மாதிரிப் படம்

இந்தியாவில் கரும்பூஞ்சை பாதிப்பைத் தொடர்ந்து வெள்ளை பூஞ்சை பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  கொரோனாவை தொடர்ந்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக மாறியிருப்பது கரும்பூஞ்சை நோய். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் சிலருக்கு Black Fungus or Mucormycosis எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்படுகிறது. கொரோனாவை தொடர்ந்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக மாறியிருப்பது கரும்பூஞ்சை நோய்.

  நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் சிலருக்கு Black Fungus or Mucormycosis எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டது. இந்தநிலையில், கரும்பூஞ்சைத் தொற்றை பெருந்தொற்று நோயாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

  இந்தநிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் நான்கு பேருக்கு வெள்ளைப் பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளைப் பூஞ்சை பாதிப்பு என்பது கரும்பூஞ்சையைவிட ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இதுகுறித்து தெரிவிக்கும் சுகாதாரத்துறை வல்லுநர்கள், ‘வெள்ளை பூஞ்சை பாதிப்பு கரும்பூஞ்சைத் தொற்றைவிட ஆபத்தானது. ஏனென்றால், இது நுரையீரல், நகம், தோல், வயிறு, சிறுநீரகம், மூளை, வாய் மற்றும் அந்தரங்க உறுப்புகளைப் பாதிக்கும்’ என்று தெரிவித்துள்ளனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: