ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

இல.கணேசன் உடல்நிலை எப்படி இருக்கிறது? - மணிப்பூர் கவர்னர் அலுவலகம் வெளியிட்ட அப்டேட்!!

இல.கணேசன் உடல்நிலை எப்படி இருக்கிறது? - மணிப்பூர் கவர்னர் அலுவலகம் வெளியிட்ட அப்டேட்!!

இல. கணேசன்

இல. கணேசன்

அவர் கார்டியாக் கேர் யூனிட்டில் சேர்க்கப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மணிப்பூர் கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  மேற்கு வங்க மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் கவர்னரும் தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவருமான இல.கணேசனுக்கு நாளை மறுநாள் ஆஞ்சியோ சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவரான இல.கணேசன், மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த அக்டோபர் 1ம் தேதியன்று ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  இதையும் வாசிக்க: தமிழ் மொழியை மற்ற மாநிலத்தவரும் கற்க வேண்டும் என்று நினைத்தவர் காந்தியடிகள் : ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

  அவர் கார்டியாக் கேர் யூனிட்டில் சேர்க்கப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மணிப்பூர் கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

  மேலும் வரும் புதன்கிழமையன்று கொரோனரி ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Chennai, Hospitalised, Ila Ganesan, Manipur