Today News in Tamil: தமிழறிஞர் அவ்வை நடராஜன் மறைவு - முதல்வர் இரங்கல்

Latest Tamil News: தமிழ்நாடு முதல் உலகம் வரை நிகழும் அனைத்து செய்திகளையும் இங்கு உடனுக்குடன் அறியலாம்.

 • News18 Tamil
 • | November 21, 2022, 22:07 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 13 DAYS AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  22:3 (IST)

  தமிழறிஞர் அவ்வை நடராஜன் மறைவு - முதல்வர் இரங்கல்

  தமிழறிஞர் அவ்வை நடராஜன் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல். அவரின் மறைவு தமிழ் துறையினருக்கும் கல்வி புலத்தாருக்கும் பேரிழப்பு என இரங்கல் தெரிவித்துள்ளார்

  21:0 (IST)

  சென்னைக்கு மிக அருகில் வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 

  தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்க கடலில்  சென்னைக்கு கிழக்கே 190 கிமீ தொலைவில் உள்ளது. 

  20:55 (IST)

  கோல் மழை பொழிந்த இங்கிலாந்து

  உலககோப்பை கால்பந்து போட்டியில் இரானுடன் பலபரிட்சை நடத்திய இங்கிலாந்து அணி, 6 கோல் அடித்து வெற்றி பெற்றது. இரான் அணி 2 கோல்களை மட்டுமே அடித்தது.

  20:35 (IST)

  தமிழறிஞர் அவ்வை நடராஜன் காலமானார்

  தமிழறிஞர் அவ்வை நடராஜன் (வயது 85) உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 

  1992 முதல் 1995 வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், செம்மொழி தமிழ் உயராய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  16:12 (IST)

  அடுத்த சில மணிநேரங்களுக்கு இடியுடன் வெளுத்துவாங்கப்போகும் மழை : எங்கெல்லாம் தெரியுமா?

  அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  15:31 (IST)

  அதிமுக பொதுக்குழு வழக்கு - 30 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

  அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அந்த வழக்கு வரும் நவம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. பதில் மனு தாக்கல் செய்யவும் ஓபிஎஸ் தரப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

  12:11 (IST)

  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் பொங்கலுக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் 

  - அமைச்சர் முத்துசாமி தகவல்

  11:52 (IST)

  மெட்ராஸ் ஐ வேகமாக பரவும் என்பதால் சுயமாக சிகிச்சை எடுக்க கூடாது. தமிழ்நாடு முழுவதும் நாள்தோறும் 4000-4500 பேர் பாதிப்பு ஏற்படுகிறது. சென்னையில் நாள்தோறும் சராசரியாக 80-100 பேர் வரை பாதிப்பு ஏற்படுகிறது.

  - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

  10:33 (IST)

  மங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம்: குற்றவாளி தமிழகத்தில் 3 நகரங்களில் தங்கியது உறுதி!

  மங்களூர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், மதுரை, நாகர்கோவில் ஆகிய 3 நகரங்களுக்கு பயணித்தது உறுதியானது. இந்நிலையில் கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் காவல்துரையினர் உஷார் நிலையில் உள்ளனர்.

  10:30 (IST)

  மங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம்: நாகர்கோவிலில் ஒருவரிடம் விசாரணை!

  மங்களூர் வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நாகர்கோவிலை சேர்ந்த அஜீம் ரகுமான் என்பவரை சந்தேகத்தின் பேரில் சிறப்பு புலனாய்வு பிரிவு (SIU)போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.