Home /News /live-updates /

#Breaking | கேரளாவிடம் இருந்து தண்ணீர் பெற தமிழக அரசு முடிவு

#Breaking | கேரளாவிடம் இருந்து தண்ணீர் பெற தமிழக அரசு முடிவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

குடிநீர் பிரச்னை தொடர்பாக முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

  • News18
  • Last Updated :
கேரளாவிடம் இருந்து தண்ணீர் பெற தமிழக முதல்வர் தலைமையில் இன்று நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக குடிநீருக்காக மக்கள் அல்லல் படும் நிலை உருவாகியுள்ளது. தலைநகர் சென்னையில் நிலைமை மோசமடைந்துள்ளது.
தமிழக அரசு லாரிகள் மூலம் எல்லா பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்து வந்தாலும், தட்டுப்பாடு தீர்ந்த பாடில்லை.

மழை பெய்தால் ஒழிய தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாத சூழலே தற்போது நிலவுகிறது. இந்நிலையில், தமிழகத்தின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கேரள அரசு உதவ முன்வந்தது.

குடிநீர் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடிவெடுத்துள்ளதாகவும், எனினும் தங்களது முடிவை ஏற்க தமிழகம் மறுத்து விட்டதாகவும், தற்போது உதவி தேவையில்லை என தமிழகம் தெரிவித்து விட்டதாகவும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஆனால், கேரளாவின் உதவியை மறுக்கவில்லை இது தொடர்பாக இன்று நடக்கும் கூட்டத்தில் முடிவெடுப்போம் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி அறிக்கை விடுத்திருந்தார்.

வேலுமணி அறிக்கை


இந்நிலையில், குடிநீர் பிரச்னை தொடர்பாக முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கேரளாவிடம் இருந்து தண்ணீர் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், இயற்கை பொய்த்ததால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதாக கூறினார்.



தினம்தோறும் 20 எம்.எல்.டி தருவதாக கேரளா கூறவில்லை. எனினும், அவர்களின் உதவிக்காக முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Published by:Sankar
First published:

Tags: Save Water, Water Crisis

அடுத்த செய்தி