மதியம் தூங்கவிடவில்லை.. நடன நிகழ்ச்சியின் போது மேடையிலேயே தூங்கிய சிறுமி - வைரலாகும் வீடியோ!

நடன நிகழ்ச்சியின் போது மேடையிலேயே தூங்கிய சிறுமி

மற்ற சிறுமிகள் அனைவரும் இசைக்கு ஏற்ப நடனமாடும் போது இந்த சிறுமி மட்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
குழந்தைகள் தங்கள் சிறு வயதில் செய்யும் சேட்டைகள் எப்போதுமே ரசிக்கத்தக்கது. அதிலும் இப்போதுள்ள குழந்தைகள் செய்யும் குறும்பு வீடியோக்கள் பல இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அதில் அவர்களின் அப்பாவித்தனம் மாயாஜாலமானது மற்றும் மக்களின் இதயங்களை எளிதில் கொள்ளையடிக்கிறது. சீனாவில் இதுபோன்ற ஒரு அப்பாவித்தனமான செயல் நடந்துள்ளது. ஒரு சிறுமி தனது நடன நிகழ்ச்சியின் போது மேடையிலேயே தூங்கும் காட்சிகள் அனைவரின் மனதையும் கொள்ளையடித்துள்ளது.

ஒன்றரை நிமிடங்களைக் கொண்ட அந்த வீடியோ கிளிப் பார்வையாளர்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் மேடைக்கு நடுவில் சிறுமி அமர்ந்தபடியே தூங்குவதைக் காணலாம். மற்ற சிறுமிகள் அனைவரும் இசைக்கு ஏற்ப நடனமாடும் போது இந்த சிறுமி மட்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுள்ளார். மேலும் சிறுமியுடன் ஜோடியாக ஆடிக்கொண்டிருந்த மற்றொரு சிறுமி, அவளை எழுப்ப முயற்சி செய்யும் காட்சிகள் கூட மனதை வருடிச் செல்லும். கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள வென்ஷோ நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின் வீடியோவை மார்ச் 26ம் தேதி அன்று சவுத் சீனா மார்னிங் போஸ்ட் யூடியூபில் பகிர்ந்துள்ளது. பகிர்ந்த சில நொடிகளிலேயே இந்த வீடியோ சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான வியூஸ்களையும், லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. இந்த வீடியோ கிளிப்பில் இளஞ்சிவப்பு நிற கவுன்களை அணிந்து, ரசிக்கும்படியான அலங்காரத்தில் வந்த சிறுமிகள் மேடையில் ஜோடி ஜோடியாக பிரிந்து நடனமாடத் தொடங்கினர். மற்ற சிறுமிகள் அனைவரும் நடனமாடிக்கொண்டிருக்கும் அந்தநேரத்தில் ஒரு சிறுமி மட்டும் தூங்க ஆரம்பித்து விடுகிறார். அவருடன் ஜோடியாக நடமாடும் மற்றொரு சிறுமி அவளை எழுப்ப முயற்சிப்பதையும் வீடியோவில் காணலாம்.

ஆனால் அந்த சிறுமி எதை பற்றியும் கவலைப்படாமல் நல்ல உறக்கத்திற்கு சென்றது போல தெரிகிறது. இது குறித்து அந்த வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, "சிறுமிக்கு மதிய உணவு இடைவேளையின் போது தூங்குவதற்கு நேரம் இல்லை. தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் சிறுமி வேறு வழியில்லாமல் மேடையில் தூங்கிவிட்டார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அவரது தாயின் கூற்றுப்படி, சிறுமி தனது மதிய உணவிற்கு பிறகு சிறிது நேரம் உறங்குவது வழக்கம். ஆனால் பள்ளியில் நடன நிகழ்ச்சிக்காக தயாராக வேண்டியிருந்ததால் எனது மகளால் உறங்க முடியவில்லை. எனவே, அவள் களைத்துப்போயிருந்ததால் மேடையில் தூங்கிவிட்டாள். நிகழ்ச்சி முடிந்த பிறகும் கூட எனது மகளை தூக்கத்தில் இருந்து என்னால் எழுப்ப முடியவில்லை என்று குழநதையின் தாயார் கூறியுள்ளார்.

Also read... மணப்பெண் தேடித்தருமாறு போலீசில் புகார் அளித்த உ.பி நபர்... நாடு முழுவதிலும் இருந்து குவியும் வரன்கள்!

அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியதால், இந்த டெம்ப்லேட்டை வைத்து பல மீம் கிரியேட்டர்கள் மீம்ஸ்களை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் பலர் சிறுமியையும் அவளுடைய சூழ்நிலையையும் தங்களுடன் தொடர்புபடுத்திக் கொண்டு பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அதில் சிலர் வேலை நேரத்தில் நான் என்னை பார்ப்பது போலவே உள்ளது என நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் சாப்பிடும்போது அல்லது பள்ளியில் பாடம் பயிலும் போது தூங்கும் எண்ணற்ற வீடியோக்கள் முன்பு இணையத்தில் வைரலானது போல தற்போது இந்த வீடியோவும் நெட்டிசன்கள் மனதை வென்றுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: