ரோஹித் சர்மா உடன் கருத்து வேறுபாடா? விராட் கோலி விளக்கம்

Vijay R | news18
Updated: July 29, 2019, 7:23 PM IST
ரோஹித் சர்மா உடன் கருத்து வேறுபாடா? விராட் கோலி விளக்கம்
விராட் கோலி
Vijay R | news18
Updated: July 29, 2019, 7:23 PM IST
ரோஹித் சர்மாவிற்கும் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய விராட் கோலி, “ ரோஹித் சர்மாவிற்கும் எனக்கும் இடையே பிளவு ஏற்பட்டு உள்ளதாக கூறுவதை நானும் கேட்டுள்ளேன். டிரெஸிங் ரூமில் ஒரு வீரருடன் நாம் பழகும் விதத்தில் தான் வெற்றியின் முக்கிய பங்காக இருக்கும். இது உண்மையாக இருந்தால் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்க மாட்டோம்.

எனக்கு ஒருவரை பிடிக்கவில்லையென்றால் என்னுடைய முகம் மற்றும் சுபாவம் மூலமாக தெரிந்துவிடும். நான் ரோஹித் சர்மாவை எப்போது பாராட்டி தான் உள்ளேன்.


ஏனென்றால் அவரை நான் முழுமையாக நம்புகிறேன். எங்களுக்கு இடையே எந்த பிரச்சினையும் இல்லை. இது ஒருவித குழப்பமான விஷயம், இவை அனைத்திலிருந்தும் யார் பயனடைகிறார்கள் என்று தான் தெரியவில்லை“ என்றார்.
First published: July 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...