• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • இங்கிலாந்து கிரேட் எஸ்கேப்: துரதிர்ஷ்ட ட்ரா குறித்து கோலி என்ன கூறுகிறார்?

இங்கிலாந்து கிரேட் எஸ்கேப்: துரதிர்ஷ்ட ட்ரா குறித்து கோலி என்ன கூறுகிறார்?

விராட் கோலி

விராட் கோலி

நாட்டிங்கம் டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்து இங்கிலாந்துக்கு கிரேட் எஸ்கேப் டெஸ்ட் போட்டியாக அமைந்தது, இந்தியாவுக்கு ஏமாற்றமே எஞ்சியது. 

  • Share this:
    5-ம் நாள் ஆட்டம் முழுதும் மழையால் கைவிடப்பட இந்திய அணிக்கு கிடைத்த அருமையான வெற்றி வாய்ப்பு எட்டாக்கனியாகி விட்டது, இன்னும் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் உண்மையில் இங்கிலாந்துக்கு பயங்கர அதிர்ஷ்டம், மழை வந்து அந்த அணி தோல்வியிலிருந்து கிரேட் எஸ்கேப்.

    இந்த டெஸ்ட் போட்டியில் பும்ரா 9 விக்கெட்டுகளைச் சாய்த்தது, ஜோ ரூட்டின் அற்புதமான 64 மற்றும் 109 ரன்கள், ஆண்டர்சனின் அருமையான பவுலிங் மட்டுமே சிறப்பாக அமைய மற்றபடி இந்திய பேட்ஸ்மென்களுக்கு சோதனைதான், இங்கிலாந்து பேட்ஸ்மென்களுக்கு வேதனைதான்.

    பும்ரா பந்து வீசும் காட்சி.


    இங்கிலாந்து அணி 183 ரன்கள் மற்றும் 303 ரன்கள். இந்தியா 278 மற்றும் 52/1 என்று முடிந்தது. 35-40 ஓவர்கள் கிடைத்திருந்தால் போதும் இந்தியா வெற்றியை நோக்கி ஆட்டத்தை நகர்த்தியிருக்கும் இங்கிலாந்துக்கு அதிர்ஷ்டம். ஜோ ரூட்டுக்கு அதிர்ஷ்டம்.

    இந்நிலையில் கைநழுவிப் போன வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

    3 மற்றும் 4ம் நாளில் மழை எதிர்பார்த்தோம், ஆனால் 5ம் நாளில் கொட்டியது. இலக்கை நோக்கி அடித்து முன்னேறும் வலுவான நிலையில் இருந்தோம். இதுதான் செய்ய நினைத்தோம், வலுவான தொடக்கத்தை விரும்பினோம்.

    5ம் நாளில் எங்கள் முன்னால் வெற்றி வாய்ப்பு பிரகாசித்தது. ஒரேயொரு நல்ல கூட்டணிதான் அதன் பிறகு உங்களுக்கே தெரியும் 150 ரன்களை அவர்களால் தடுக்க முடியுமா இல்லையா என்பது.

    முதல் டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தின் டீ டைம் போது பேர்ஸ்டொ (29) விக்கெட்டை ஷமி வீழ்த்தினார். டீ டைத்தில் இங்கிலாந்து 138/4 என்று இருந்தது.


    ஆட்டத்தில் டாப் நிலையில் இருந்தோம் என்றுதான் கூற வேண்டும். நன்றாக பந்து வீசினோம், நன்றாக பேட்டிங்கும் செய்தோம். முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

    209 ரன்கள் வெற்றிக்கு முதல் நாளில் 1 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்தது மிகப்பெரிய சாதக அம்சம். எங்களது தீவிரம்தான் ஆட்டத்தில் எங்களை வலுவான நிலைக்கு இட்டு சென்றது. 5ம் நாளில் கூட வலுவாகவே இருந்திருப்போம்.

    ஜோ ரூட்


    முகமது ஷமி, சிராஜ், பும்ரா ஆகியோரிடமிருந்து 50 ரன்கள் வந்தது என்பது தங்கம் போன்றது. 40 ரன்கள் முன்னிலை போதும் என்று நினைத்திருந்த நிலையில் 95 ரன்கள் முன்னிலை இவர்கள் பங்களிப்பினால்தான் வந்தது. பவுலர்கள் ரன்கள் எடுத்தால் எதிரணிக்கு எரிச்சல் அதிகரிக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தத் தொடரில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு ஸ்பின்னர் என்ற சேர்க்கையே தொடரில் இருக்கச் சாத்தியம். சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்வது எங்களது பலம். இந்த அணிச்சேர்க்கைதான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    இவ்வாறு கூறினார் விராட் கோலி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: