அரசின் தடையை மீறி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம் - இந்து முன்னணி

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்கவும், அதை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது நிலையில், அதற்க்கு இந்து முன்னணி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அரசின் தடையை மீறி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம் - இந்து முன்னணி
விநாயகர் ஊர்வலம் (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: August 13, 2020, 8:17 PM IST
  • Share this:
விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 22-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொது விழாக்களை தவிர்க்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவோ, சிலை வைத்து விழா கொண்டாடவோ அனுமதி இல்லை என கூறியிருப்பதோடு, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. எனவே வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடுமாறு அறிவுறுத்தியுள்ள தமிழக அரசு, பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைக்கோ செல்பவர்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. சிறிய கோயில்களில் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள தமிழக அரசு, அங்கும் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் தடையை மீறி மாநிலம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம் என்று இந்து முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.


கோவை காட்டூரில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், அரசியல் ஆதாயத்திற்காக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்துள்ளதாக தெரிவித்தார்.
First published: August 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading