ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

தயாரான லோகேஷ் கனகராஜ்.. டிசம்பரில் தொடங்குது தளபதி 67.. சூப்பர் அப்டேட்!

தயாரான லோகேஷ் கனகராஜ்.. டிசம்பரில் தொடங்குது தளபதி 67.. சூப்பர் அப்டேட்!

விஜய்

விஜய்

விஜய் 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி டிசம்பர் முதல் வாரத்தில் பூஜையுடன் தொடங்கும் என தகவல்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் முடிவடை உள்ளது.  மேலும் வாரிசு திரைப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட உள்ளனர்.  இந்த திரைப்படத்தை தமிழகத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளரும், விஜய்-67 படத்தை தயாரிக்க உள்ளவருமான லலித்குமார் வெளியிடுகிறார்.

    இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. இந்த நிலையில் படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளிலும் பட குழுவினர் இறங்கியுள்ளனர். அதில் முதல் கட்டமாக நடிகர் விஜயின் வாரிசு படத்தை புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.  அது தற்போது வைரலாகி வருகிறது.  அதேசமயம் பாடல் வெளியீட்டு விழாவை நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் இரண்டு வாரங்களுக்கு மேலாக நடைபெற்று வருகின்றன.

    Thalapathy Vijay Varisu first single will be a Kuthu song, varisu update, varisu music composition, varisu music, வாரிசு அப்டேட், வாரிசு பாடல்கள், varisu firstlook poster, varisu meaning, varisu meaning in tamil, varisu release date, varisu music director, varisu movie, varisu cast, varisu story, varisu images, vijay varisu bike, varisu bike price, varisu bike details, வாரிசு பைக் விலை, வாரிசு விஜய், thalapathy vijay varisu, thalapathy vijay age, vijay 48, thalapathy vijay, thalapathy vijay birthday, vijay birthday, தளபதி விஜய், விஜய் படங்கள், தளபதி விஜய் பிறந்தநாள், தளபதி விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம், தளபதி விஜய் ரசிகர்கள்,
    நடிகர் விஜய்

    இந்நிலையில் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படம் திட்டமிட்டப்படி டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் விஜய் சிறிய விடுமுறைக்காக துபாய் சென்றுள்ளார். அவர் சென்னை திரும்பியவுடன் வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வார்.

    அதன்பின் லோகேஷ் இயக்கய்தில், விஜய் தன்னுடைய 67வது படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் படத்தின் நடிகர்களும் இறுதி செய்யப்பட்டு வருகின்றனர்.

    முதல்கட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவருவதால் விஜய் 67 படத்தை திட்டமிட்டப்படி டிசம்பர் முதல்வாரம் பூஜையுடன் தொடங்கவுள்ளது என படக்குழு தரப்பில் கூறுகின்றனர். அதேபோல் நடிகர் விஜய் வாரிசு டப்பிங் வேலைகளை முடித்துகொடுத்துவிட்டு லோகேஷ் படத்தில் இணையவுள்ளார்.

    Published by:Murugadoss C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Vijay