Karnan: மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி

கர்ணன் திரைப்படத்தைப் பார்த்து விட்டு இயக்குநர் மாரி செல்வராஜை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

  • Share this:
    கர்ணன் திரைப்படத்தைப் பார்த்து விட்டு இயக்குநர் மாரி செல்வராஜை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

    பரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது கர்ணன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி பிரியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு இப்படத்தைத் தயாரித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கர்ணன் படம் கடந்த வெள்ளியன்று வெளியானது.



    பல பிரபலங்களும், ரசிகர்களும் இப்படத்தைப் பார்த்து அதை பாராட்டி வருகின்றனர். முன்னதாக நடிகர் விஜய் சேதுபதி ‘கர்ணன் எக்ஸெலண்ட்’ படம் என தனது சமூக வலைதளத்தில் பாராட்டியிருந்தார். இந்நிலையில் அவர் திரையரங்கில் படத்தைப் பார்த்து விட்டு வெளியில் வந்து, இயக்குநர் மாரி செல்வராஜை கட்டிப் பிடித்து ’படம் நல்லாருக்கு’ என பாராட்டியதோடு, அவர் கையைப் பிடித்து முத்தமும் கொடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: