ஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களைப் பெற்று கொள்ளலாம் - காவல்துறை அறிவிப்பு

ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒருமுறை 10 நபர்களுக்கு என வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும்.

ஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களைப் பெற்று கொள்ளலாம் - காவல்துறை அறிவிப்பு
வாகன சோதனையில் போலீசார் (மாதிரி படம்)
  • Share this:
ஊரடங்கு நடைமுறையை மீறியவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 24-03-2020 முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். தினசரி காலை 07-00 மணி முதல் பகல் 12: 30 வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒருமுறை 10 நபர்களுக்கு என வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும்.

இத்தருணத்தில் சமூக இடைவெளி அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வழங்கப்படும்.


24-03-2020 அன்று முதல் FIR பதிவு செய்யப்பட்ட வரிசைப்படி வாகன உரிமையாளர்களுக்கு எந்த இடத்தில் வந்து வாகனங்களை பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற தகவல் அனுப்படும். அவர்கள் நேரில் வந்தவுடன் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வாகனங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

வாகன உரிமையாளர்கள் கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் : வாகன உரிமையாளரின் டிரைவிங் லைசென்ஸ் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் மற்றும் வாகனத்தின் ஆர்.சி.புத்தகம் ஒரிஜினல் மற்றும் ஜெராகஸ் காண்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.

First published: April 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading