ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

என் தாத்தாவை ராகுல் அவமானப்படுத்திவிட்டார்.. சவார்க்கர் பேரன் ஆதங்கம்

என் தாத்தாவை ராகுல் அவமானப்படுத்திவிட்டார்.. சவார்க்கர் பேரன் ஆதங்கம்

மாதிரி படம்

மாதிரி படம்

பாரத் ஜோடா யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சுதந்திர போராட்ட வீரராகிய தனது தாத்தாவை அவமானப்படுத்தியதாக ராகுல்காந்தி  மீது வழக்கு தொடர உள்ளதாக வீர சாவர்க்கரின் பேரன் அறிவித்துள்ளார்.

  பாரத் ஜோடோ யாத்திரை மூலம் நாடு முழுவதும் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன் தொடர்ச்சியாக மகாராஷ்ட்ரா மாநிலம் ஹங்கோலியில் கடந்த செவ்வாய்க்கிழமை பழங்குடியின போராளி பிர்சா முண்டாவின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டார்.

  அப்போது பேசிய ராகுல், 24 வயதில் நாட்டிற்காக தனது இன்னுயிரை கொடுத்த பிர்சா முண்டா வீர சாவர்க்கரைப் போல ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து போகவில்லை என்றார்.  ஆங்கிலேயர்கள் முண்டாவுக்கு எத்தனையோ சலுகைகள் அளிக்க முன்வந்த போதிலும் அதை எல்லாம் ஏற்காமல் போரட்டம் நடத்தியவர். ஆனால் விடுதலை போராட்ட வீரராக ஆர்எஸ்எஸ் உருவகப்படுத்தும் வீர சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்தபோது தன்னை மன்னித்து தனக்கு விடுதலை வழங்குமாறு மன்றாடியவர் எனக் கூறினார். மேலும் ஆங்கிலேயர்கள் அளித்த ஓய்வூதியம் உளளிட்ட சலுகைகளை அனுபவித்தவர் வீர சாவர்க்கர் என்றும் பேசியுள்ளார்.

  இதையடுத்து விடுதலை போராட்ட வீரராகிய தனது தாத்தாவை இழிவு படுத்தி பேசியதாக ராகுல்காந்தி மீது காவல்துறையிடம் புகார் அளிக்க உள்ளதாக வீர சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் கூறியுள்ளார். ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து வீர சாவர்க்கரை இழிவு படுத்தி வருவதாகவும் ரஞ்சித் சாவர்க்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

  இதையும் படிங்க: பயணிகள் இனி விரும்பிய உணவை ஆர்டர் செய்யலாம் - இந்திய ரயில்வேயில் புதிய சேவை அறிமுகம்

  வீர சாவர்க்கரை இழிவு படுத்துவதின் மூலம் ராகுல்காந்தியும், காங்கிரஸ் கட்சியும் மிக மோசமான வாக்கு வங்கி அரசியல் செய்து வருவதாகவும், இதை இனிமேலும் அனுமதிக்க முடியாது எனவும் ரஞ்சித் சாவர்க்கர் கூறியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே திட்டமிட்டு சாவர்கரின் புகழை களங்கப்படுத்தும் நோக்கில அவதூறு பரப்பி வருவதாகவும் ரஞ்சித் சாவர்க்கர் கூறியுள்ளார்.  ராகுல்காந்தி மீது மும்பை மாநகர சிவாஜி பார்க் காவல்நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் ரஞ்சித் சாவர்க்கர் தெரிவித்துள்ளார்.

  பாரத் ஜோடா யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது ராகுல் காந்தி மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். தனது பயணத்தில் குஜராத் மாநிலத்தை ராகுல்காந்தி தவிர்க்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Congress, RahulGandhi, RSS