அமெரிக்காவில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே சுதந்திர தின கொண்டாட்டங்கள்

அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், 244-வது சுதந்திர தினம் வாண வேடிக்கைகளுடன் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

அமெரிக்காவில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே சுதந்திர தின கொண்டாட்டங்கள்
சுதந்திர தின கொண்டாட்டத்தை பார்க்கும் மெலனியா, டிரம்ப்
  • News18
  • Last Updated: July 6, 2020, 6:59 AM IST
  • Share this:
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவுக்கு அமெரிக்காவில் இதுவரை 29 லட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்து 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்.

கொரோனா கோரத்தாண்டவம் ஒருபுறமிருக்க, இனவெறிக்கு எதிரான போராட்டமும் கிளை பரப்பியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் 244வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, தேசிய நினைவிடம் அமைந்துள்ள மவுண்ட் ராஷ்மோரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், அமெரிக்காவில் அண்மைக்காலமாக நடைபெறும் போராட்டங்கள் கவலையளிப்பதாக தெரிவித்தார். மேலும், இனவெறிக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, அமெரிக்காவின் வரலாற்றை அழிக்க நினைப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இந்த கூட்டத்தில் ஏராளமானோர் முகக்கவசம் அணியாமல் பங்கேற்று இருந்தனர்.


பின்னர் வெள்ளை மாளிகைக்கு விமானம் மூலம் வந்த டிரம்ப், அங்கு நடைபெற்ற விழாவில் மனைவி மெலானியாவுடன் கலந்து கொண்டார். அப்போது, ராணுவ வீரர்கள் மற்றும் சேவை அமைப்புகளை கவுரவிக்கும் வகையில், போர் விமானங்கள் வானில் அணிவகுத்தன. இதை பார்த்து, அங்கிருந்த ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகமடைந்தனர்.



இதேபோல் விமானப்படை வீரர்களும் பாராசூட் மூலம் அமெரிக்க கொடியுடன் பறந்து வேடிக்கை நிகழ்த்தினர்.

அதைத் தொடர்ந்து பல்வேறு விதமான பட்டாசுகளும் வெடிக்கப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதை அதிபர் டிரம்பும், மெலானியாவும் கண்டு ரசித்தனர்.

பின்னர் இரவு நேரத்திலும் வெள்ளை மாளிகை அருகே வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. நியூயார்க் நகரத்திலும் வாண வேடிக்கை நடைபெற்றது.




படிக்க: கொரோனாவுக்கான எந்த தடுப்பு மருந்தும் 2021-க்கு முன் பயன்பாட்டுக்கு வராது - மத்திய அரசு

படிக்க: கொரோனா பரவல் குறித்த தகவல்களை சீனா மறைத்ததாக அமெரிக்கா புகார் - சீனா விரைகிறது WHO குழு








இதனிடையே, அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடியின் ட்வீட்டுக்கு அதிபர் டிரம்ப் பதிலளித்துள்ளார். அதில், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்ததோடு, இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவின் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கலிபோர்னியா கடற்கரையில் ஏராளமானோர் குவிந்திருந்தனர். முகக்கவசம், தனிமனித இடைவெளி என எதையும் பின்பற்றாமல் அவர் சுற்றித் திரிந்தது கொரோனா பரவலின் வேகத்தை அதிகரிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading