ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

''இளைஞர்களே ஜாக்கிரதை! வேடம் அணிந்து ஊடுறுவும் நகர்ப்புற நக்சல்கள்'' - மேடையில் பேசிய பிரதமர் மோடி!

''இளைஞர்களே ஜாக்கிரதை! வேடம் அணிந்து ஊடுறுவும் நகர்ப்புற நக்சல்கள்'' - மேடையில் பேசிய பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

குஜராத்தில் மக்களிடையே பேசிய பிரதமர் மோடி ஆம் ஆத்மி கட்சியை நகர்ப்புற நக்சல்கள் என மறைமுகமாக சாடி எச்சரித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Gujarat, India

  குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், இப்போதே தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் கடந்த சில வாரங்களாகவே தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். குஜராத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது.

  டெல்லியில் முதலில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி அரசு டெல்லி மாடல் அரசு என்ற கோஷத்தை முன்னெடுத்து பஞ்சாப்பிலும் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆக்மி கட்சி, ஹரியானா, கோவா போன்ற மற்ற மாநிலங்களிலும் தனது கட்சியை தீவிரமாக வளர்த்து வருகிறது. குஜராத்தில் கடந்த வருடம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றியது.

  இதை நம்பிக்கையாகக் கொண்டு குஜராத்திலும் ஆம் ஆத்மியின் தடத்தை பதிக்க கெஜ்ரிவால் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச கல்வி, உதவித்தொகை என்பது தொடங்கி அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவச பயணம் என்பது வரை பல்வேறு வாக்குறுதிகளை அரவிந்த் கெஜ்ரிவால் அள்ளி வீசி வருகிறார்.

  அதேவேளை, பிரதமர் மோடியும் கடந்த ஒரு மாத காலமாக குஜராத் மாநிலத்திற்கு தொடர்ச்சியாக பயணம் மேற்கொண்டு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து மக்களிடையே உரையாற்றி வருகிறார். குஜராத் மக்கள் மண்ணின் மைந்தனான தனக்காக பாஜகவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும் என பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். இன்று குஜராத்தின் பாரூச் மாவட்டத்தில் நலத் திட்ட பணிகளை தொடங்கி வைத்து மக்களிடையே பேசிய பிரதமர் மோடி, ஆம் ஆத்மி கட்சி மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.

  இதையும் படிங்க: மதமாற்ற நிகழ்வில் பங்கேற்றதால் ஏற்பட்ட சர்ச்சை.. பாஜக அழுத்தத்தால் ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா!

  பிரதமர் மோடி தனது உரையில், "நமது மாநிலத்தில் நகர்ப்புற நக்சல்கள் மாறு வேடமணிந்து ஊடுருவ பார்க்கிறார்கள். தங்களின் உடைகளை மாற்றி வேஷம் போட்டு அவர்கள் நமது இளைஞர்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். ஆற்றல் மிக்க அப்பாவி இளைஞர்கள் சிலர் அவர்கள் ஏமாற்று வேலையால் மயங்கி அவர்களை பின்தொடர்கின்றனர். நமது இளம் தலைமுறை அவர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள். அதை நாம் அனுமதிக்கக் கூடாது. நாட்டை அழிக்கத்துடிக்கும் நகர்ப்புற நக்சல்கள் குறித்து நமது குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் நாம் எச்சரிக்கை ஏற்படுத்த வேண்டும். அந்நிய நாட்டு சக்திகளின் ஏஜென்டுகளான அவர்களை குஜராத்திகள் அடித்து வீழ்த்துவார்கள் என நம்புகிறேன்" என்றார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Gujarat, PM Modi, Urban naxal