நான் என் கடமையைத் தான் செய்தேன்! பிரியங்கா காந்தி விவகாரத்தில் விளக்கமளித்த பெண்காவலர்

நான் என் கடமையைத் தான் செய்தேன்! பிரியங்கா காந்தி விவகாரத்தில் விளக்கமளித்த பெண்காவலர்
பிரியங்கா காந்தி
  • News18
  • Last Updated: December 29, 2019, 4:09 PM IST
  • Share this:
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி எந்த விதத்திலும் தாக்கப்படவில்லை என்று உத்தரப் பிரதேச காவலர் விளக்கம் அளித்துள்ளார். 

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் 20-க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தநிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி எஸ்.ஆர். தாராபுரியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரது குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக பிரியங்கா காந்தி காரில் சென்றார். அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் மேற்கொண்டு செல்ல அனுமதிக்கவிலை. அதனையடுத்து, அருகிலிருந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து பிரியங்கா காந்தி சென்றார். அவரை பின்தொடர்ந்து சென்ற காவல்துறையினர் அவரை வழிமறித்தனர். பின்னர், இரு சக்கர வாகனத்திலிருந்து இறங்கி நடந்து சென்றார். அப்போதும் அவரைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, ‘நான் தாராபூரின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றபோது காவல்துறையினர் என்னைத் தடுத்து நிறுத்தினர். பெண் காவலர்கள் என்னைக் கழுத்தைப் பிடித்து நெறித்து கீழே தள்ளிவிட்டனர்’ என்று குற்றம்சாட்டினார்.

இந்தநிலையில், இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள காவலர் அர்ச்சனா சிங், ‘பிரியங்கா காந்தி கழுத்தைப் பிடித்து நெறித்து கீழே தள்ளப்பட்டார் என்று சமூக வலைதளங்களில் பரவும் செய்தியில் துளியேனும் உண்மையில்லை. நான் என்னுடைய கடமையைத் தான் செய்தேன். அவர் திட்டமிட்டிருந்த பயணத்தை மாற்றியதால் குழப்பம் ஏற்பட்டது. வி.ஐ.பிக்கள் பயணத் திட்டத்தை மாற்றும்போது போக்குவரத்து சிக்கல் ஏற்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:
First published: December 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்