ரூபாய் 1.8 லட்சம் செலவில் விருந்தினர்களுக்கு கட்-அவுட் வைத்த ஜோடி.. கார்ட்போர்டு விருந்தினர்களுடன் நடந்த கல்யாணம்...!

ரோமானி மற்றும் சாமின் அற்புதமான காதல் கதை நம் அன்றாட வாழ்க்கையில் கொரோனா வைரஸ் சவாலை எதிர்கொள்ளும் நம்மில் பலருக்கு ஊக்கமளிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ரூபாய் 1.8 லட்சம் செலவில் விருந்தினர்களுக்கு கட்-அவுட் வைத்த ஜோடி.. கார்ட்போர்டு விருந்தினர்களுடன் நடந்த கல்யாணம்...!
கார்ட்போர்டு விருந்தினர்கள்
  • News18 Tamil
  • Last Updated: September 13, 2020, 1:37 PM IST
  • Share this:
கொரோனா சமூக விலகல் காரணத்தால், விருந்தினர் பலர் வரமுடியாத சூழலால், இங்கிலாந்தில் மரத்தால் ஆன கட் அவுட்களில் விருந்தினர்களை உருவாக்கி திருமணம் செய்து கொண்ட ஜோடியின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து தம்பதியினர் தங்கள் திருமணத்திற்கு மரத்தால் ஆன விருந்தினர்கள் கட் அவுட்டுகளை உருவாக்க சுமார் 2000 பவுண்டுகள் அதாவது ரூ.1.8 லட்சம் செலவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள கடினமான சூழ்நிலைகள் காரணமாக பல்வேறு  விசித்திரமான சம்பவங்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.Some weddings we go to the guests can be a bit static but these guys really took it to a new level! Throw in #facemasks...

Posted by Hawaiian Shirt Photography on Wednesday, August 26, 2020

கில்ட்ஃபோர்டில் உள்ள பிராம்லி நகரில் ரோமானி மற்றும் சாம் ரோண்டியோ ஸ்மித் ஆகியோர் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு முன்னரே திருமணம் செய்ய திட்டமிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கொரோனா நோய் பரவல்  நீட்சி காரணமாக அவர்களது திருமணம் தாமதமானது. கொரோனா நோய் பரவல் முடிவுக்கு வந்த பின்னர் ஆடம்பரமாக திருமணம் செய்யலாம் என முடிவு எடுத்தனர்.

ரோமானி-சாம்


எனினும் தொடர்ந்து நிலைமை மோசமாக இருப்பதை பார்த்து அவர்கள் உடனடியாக திருமணம் செய்து வாழ்வை தொடங்க முடிவு செய்தனர். ஆனால் ஒரு சிக்கல் ஏற்பட்டது. ஏராளமான விருந்தினர்களை அழைத்து வந்து சமூக இடைவெளி வழிகாட்டுதல்களை பின்பற்றி எப்படி திருமணத்தை நடத்த முடியும் என யோசித்தனர்.

அப்போது அட்டை கட் அவுட்களில் இருந்து விருந்தினர்களை உருவாக்கும் ஒரு அற்புதமான யோசனை இந்த ஜோடிக்கு தோன்றியுள்ளது. இதையடுத்து 50 மரத்தால் ஆன விருந்தினர்களை வடிவமைத்து திருமண அறையில் வைத்து திருமணத்தை மகிழ்ச்சியாக நடத்தியுள்ளனர். மேலும் திருமண புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில்  50 மரத்தால் ஆன விருந்தினர்களுடன் திருமண படங்கள் அழகாக காட்சியளிக்கிறது.

இந்த திருமணத்தில் உண்மையான நபர்களும் கலந்து கொண்டனர். நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு புதுமண தம்பதியரை ஆசீர்வதித்துள்ளனர். பொம்மை விருந்தினர்களைப் போல இல்லானல் அவர்கள் மாஸ்க் அணிந்திருந்தார்கள்.

ரோமானி மற்றும் சாம் தொற்றுநோய் பரவலுக்கு முன்னர் திருமணத்திற்கு சுமார் 100 விருந்தினர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். அதற்கேற்ப திருமணத்தை திட்டமிட்டிருந்தனர். பின்னர் திருமண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டதால் அவர்களது மேலாளர்கள் திட்டங்களின் மாற்றத்திற்கு இடமளித்தனர். இதுகுறித்து பேசிய ரோமானி, காத்திருப்பதை விரும்பவில்லை என்பதால் உடனடியாக திருமணம் செய்து கொள்ள விரும்பினேன் என்று கூறினார்.

மனிதர்களாகிய நாம், நம் படைப்பாற்றலை கொண்டு கடினமான சவால்களை எதிர்கொள்ள நேரம் இருக்கிறது. இதன் மூலம் கண்ணுக்கு தெரியாத எதிரியையும் நாம் வெல்வோம். ரோமானி மற்றும் சாமின் அற்புதமான காதல் கதை நம் அன்றாட வாழ்க்கையில் கொரோனா வைரஸ் சவாலை எதிர்கொள்ளும் நம்மில் பலருக்கு ஊக்கமளிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
First published: September 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading