கொஞ்சம் விட்டால் முதல்வர் பழனிசாமி தமிழகத்தை மோடியிடம் விற்றுவிடுவார் - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக உரிமைகளை மோடிகிட்ட அடமானம் வைத்துள்ளார் கொஞ்சம் விட்டால் தமிழகத்தை  விற்றுவிடுவார் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

 • Share this:
  விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மார்க்கண்டேயனை ஆதரித்து விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பேசுகையில், இந்த தொகுதியில் பல முறை ஏமாத்திட்டீங்க, ஏமாந்து போனீங்க.  இந்த முறை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

  நான்  எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் 234 தொகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற வைக்க தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறேன். நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக கூட்டணி க்கு தந்தீர்கள். இதனால் தான் தமிழக மக்கள் மீது மோடிக்கு கோபம்.

  ஜிஎஸ்டி வரி வசூலை தமிழகத்திற்கு நிதி நெருக்கடி என்று காரணம் காட்டி தரவில்லை. ஆனால் மோடி செல்ல தனி சொகுசு. விமானம், நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நிதி எப்படி வந்தது. புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றத்தினால் தமிழகம் பாதிக்கப்பட்ட போது போதிய நிதியை தமிழகத்திற்கு தரவில்லை.

  எய்ம்ஸ் மருத்துவமனை என்ற பெயரில் ஒரு செங்கலுக்கு ரூ.75 கோடி ரூபாய் கணக்கு காட்டியுள்ளார். இதனை எதிர்த்து கேள்விக்கு முடியமால் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக உரிமைகளை மோடிகிட்ட அடமானம் வைத்துள்ளார். கொஞ்சம் விட்டால் தமிழகத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விற்றுவிடுவார்.

  வரும் தேர்தலில் உங்கள் வாக்கு மூலம் மோடி, எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு கொட்டு வைக்க வேண்டும். பண மதிப்பு இழப்பு மூலமாக பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். புதிய இந்திய பிறக்க போகிறது என்றும், 15 லட்சம் போடப்படும் என்று அறிவித்து ஏமாற்றியவர்மோடி.

  ஜெயலலிதா இருக்கும் வரை நீட் தேர்வினை எதிர்த்தார். ஆனால் இபிஎஸ், ஓபிஎஸ் தமிழகத்தில் நீட் தேர்வினை கொண்டு வந்தனர். 14 பேர் நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்டனர்.திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் தள்ளுபடி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

  குடும்ப தலைவிக்கு உரிமை தொகை ரூ 1000.கொரோனா நிதி ரூ 4000 வழங்கப்படும்.  அதிமுகவிற்கு போடும் வாக்கு பாஜகவிற்கு போடும் வாக்கு. இரட்டை இலை சின்னத்திற்கு போடும் வாக்கு பாஜக சின்னத்திற்கு போடும் வாக்கும். பாஜக சின்னம் எனக்கு தெரியாது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி. படுகொலை செய்யப்பட்டனர்.பொள்ளாச்சி பாலியல் வழக்கு முதல் குற்றவாளி அதிமுக நிர்வாகிகள்.

  தமிழகத்தில் யாரூக்கும் பாதுகாப்பு இல்லை. பெண் எஸ்.பி. ஒருவர் சிறப்பு டிஜிபி மீது பாலியல் புகார் அளித்துள்ளார் என்னுடைய முதல் பிரச்சாரத்தினை தடுத்தவர் இந்த சிறப்பு டிஜிபி. ஜெயலலிதா எப்படி இறந்தார் என்று தெரியுமா? ஒரு முதல்வருக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. மோடியா, லேடியா என்று மோடிக்கு சாவல் விட்டு வெற்றி பெற்றவர் ஜெயலலிதா.

  சென்னை. டெல்லியில் உள்ள இரு அம்மாவாசைகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கு மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றா்.
  Published by:Vijay R
  First published: