திமுக அமைச்சரவையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகபோகிறார் என்ற தகவல் பெரிய விசயம் இல்லை என்றும் தற்போதே, தமிழக முதல்வர் போல் உதயநிதி ஸ்டாலின், அவரது தாய், மருமகன் செயல்படுகின்றனர் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.
திமுக அரசை கண்டித்து, மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், வருகிற 13 ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதற்கான கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. அப்போது, முன்னாள்அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதிமுகவுக்கு கூடும் கூட்டத்தை தமிழக உளவுத்துறை முதல்வரிடம் எடுத்து கூறியிருக்கும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிரிந்து சென்ற நாளை அமைதி பேரணி நடத்தி மதுரையில் அவரை நினைவு கூர்ந்தோம். அதிமுகவின் தொடர் போராட்டம் வெற்றி பெறுவதை, திமுக அமைச்சர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் அதிமுகவை உட்கட்சி பூசல் என குற்றம் சாட்டி திசை திருப்புகின்றனர்.
இதையும் படிக்க : இன்னொரு கட்சிக்கு தீப்பந்தம்.. பூமர் அங்கிள் - பரபர ட்வீட் செய்த டிஆர்பி ராஜா!
திமுக அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்கு அதிமுகவினர் யாரும் பொருட்படுத்த மாட்டோம். அதிமுகவின் நோக்கம் தெளிவானது. எங்களின் எண்ணம் உயர்வானது. திமுக மக்களுக்கு விடியலை தருவோம் என கூறி தற்போது விடியாத அரசாக உள்ளது. அதிமுகவை குறைத்து மதிப்பிடுபவர்களுக்கு சரியான சவுக்கடி கொடுக்கும் வகையில் போராட்டம் நடைபெறும்.
அதிமுக ஒன்றுபட்ட இயக்கம். அதிமுகவில் இருந்து ஒரு சிலர் போயிருக்கலாம். அதைப்பற்றி நாங்கள் பொருட்படுத்தவில்லை. திமுக அமைச்சர்கள் கலெக்க்ஷன், கரெப்ஷன் என உள்ளனர். அவர்களின் ஊழலை மறைக்க எங்களை குற்றம் சாட்டுகின்றனர். அதிமுக எதிர்காலத்தை கருதி போராட்டங்களை நடத்தவில்லை. தேர்தலை நோக்கி அதிமுக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தவில்லை.
தேர்தல் வரும் போகும், நாங்கள் மக்கள் நலனுக்காகத்தான் போராடி வருகிறோம். பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடித்தது திமுக. தற்போது தமிழகத்தில் லஞ்ச, லாவண்யம் ஆறாக பெருகி உள்ளது. நாளைய தேர்தலை எண்ணி அதிமுக போராடவில்லை. அதிமுக செல்வாக்கை நிருபிக்க போராட்டம் நடத்த வேண்டியது இல்லை” என தெரிவித்தார்.
மேலும், உதயநிதி அமைச்சராக நியமணம் செய்ய உள்ளதாக வரும் செய்திகள் குறித்த கேள்விக்கு, “திமுக சட்டசபையில் பெருபான்மையாக உள்ளதால், யாரையும் அமைச்சராக்கும் பொறுப்பு முதல்வருக்கு உள்ளது. திமுக ஒரு கம்பெனி தான். குடும்பம் தான் கழகம். குடும்பத்தினர் தான் தலைவர். திமுக அமைச்சரவையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகபோகிறார் என்ற தகவல், பெரிய விசயம் இல்லை. தற்போதே, தமிழக முதல்வர் போல் உதயநிதி ஸ்டாலின், அவரது தாய், மருமகன் செயல்படுகின்றனர்
வெளிநாட்டு அதிபர்கள் தான் சொகுசு ரெயிலில் போயுள்ளனர். பல லட்சத்தை கொடுத்து சொகுசு ரயிலை முதல்வருக்கு புக் செய்துள்ளனர். மக்களின் வரிப்பணம் வீணாகி உள்ளது. முதவர் எந்த வண்டியிலும் போகலாம் வரலாம். திமுகவினர் கூச்சப்படமாட்டார்கள். எந்த அமைச்சரும் மக்களுக்கு பயப்பட மாட்டார்கள்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “திராவிட மாடல் முதல்வர், சென்னை மேயரை காரில் தொத்தி கொண்டு ஏற விட்டுள்ளார். கொடுமையிலும் கொடுமை பெருங்கொடுமை மூத்த IAS அதிகாரி ஓடி வந்து காரில் தொற்றி கொண்டு வருகிறார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இதுபோன்ற செயல்ககளில் ஈடுபடமாட்டார்கள். பெண்களுக்கு சம உரிமை என கூறுவர். ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர். இதுபோன்ற செயல்களால் தான் அரசியல்வாதியை வெறுத்து ஒதுக்குகின்றனர்.
மேயருக்கு உரிய அரியாசனம் கொடுத்திருக்க வேண்டும். திமுக மாற வேண்டும். முதல்வரின் மனைவியை காக்கா பிடிக்க வேண்டும் என நினைப்பதற்கு இடம் கொடுக்கக்கூடாது. அரசு நிர்வாகம் சீர்கெட்டு போயுள்ளது” இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.