சசிகலாவை வரவேற்க அனுமதி.. ஆனாலும் கவனம் - தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை

டி.டி.வி.தினகரன்

சசிகலா அவர்களுக்கு நாம் அளிக்கும் வரவேற்பை மிகுந்த கவனத்தோடு அமைத்துகொள்ள வேண்டும்.

 • Share this:
  சசிகலாவை வரவேற்க காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர் இருந்தால் சிலர் சதி செய்து உண்மை தொண்டர்கள் மீது பழி போட அனுமதிக்க கூடாது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

  சொத்து குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறையில் விடுதலையான சசிகலா நாளை மறுநாள் தமிழகம் வருகை உள்ளார். சசிகலாவை சிறப்பாக வரவேற்க காவல்துறையினர் சார்பில் அனுமதிகோரப்பட்டது. காவல்துறையினர் தற்போது அதற்கு அனுமதி வழங்கி உள்ளதாக டிடிவி தினகரன் தெரவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '“பதற்றத்தில் இருக்கும் சிலர் எத்தகைய பாதகத்தையும் செய்திட துணிந்தவர்கள் என்பதால், சசிகலா அவர்களுக்கு நாம் அளிக்கும் வரவேற்பை மிகுந்த கவனத்தோடு அமைத்துகொள்ள வேண்டும். தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து சென்னை இல்லம் வரை ராணுவக் கட்டுப்பாட்டோடு சாலையின் இருமருங்கிலும் திரண்டு நின்று நம்முடைய மகிழ்ச்சியை வெளிப்படத்திட வேண்டும். போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எந்தவித இடையூறும் இல்லாத வகையில் அதற்கான ஏற்பாடுகாளை செய்திட வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளையும் முறைப்படி கடைப்பிடித்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்“ என்றுள்ளார்.
  Published by:Vijay R
  First published: