மனைவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை - கணவன், நண்பன் கைது

திருச்சியில் மது போதைக்காக மனைவியின் படுக்கையை நண்பனுக்கு பகிர்ந்த கணவரையும், 9 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த நண்பரையும் போலீசார் கைது செய்தனர்.

மனைவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை - கணவன், நண்பன் கைது
கைதான பாரூக் மற்றும் அஸ்லாம்
  • News18
  • Last Updated: June 30, 2020, 8:08 AM IST
  • Share this:
திருச்சி, கே.கே.நகர், அன்பில் தர்மலிங்கம் நகரை சேர்ந்தவர் 41 வயதான தினேஷ் என்ற முகமது அஸ்லாம். இவரும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த மதபோதகர், 41 வயதான முகமது பாரூக் என்பவரும் கல்லுாரிக் காலம் முதல் நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

கடந்த 2005ம் ஆண்டு, இஸ்லாமியப் பெண் ஒருவரை தினேஷ் காதலித்தார். நண்பர் பாரூக், தினேஷையும் அவரது தங்கையையும் மதம் மாற்றியுள்ளார். தினேஷுக்கு முகமது அஸ்லாம் எனப் பெயர் சூட்டி காதலியுடன் திருமணம் செய்து வைத்தார்.

அவ்வப்போது அஸ்லாம் வீட்டிற்கு வந்து சென்ற பாரூக், புனித நீர் தெளித்து சடங்குகளைச் செய்து வந்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு, பாரூக், புனித தீர்த்தம் எனக் கூறி அஸ்லாமின் மனைவிக்கு மயக்க மருந்து கலந்த தண்ணீரைக் கொடுத்துள்ளார்.


அந்தப் பெண் நீரைக் குடித்து மயங்கவே, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்; அதை போட்டோவாக எடுத்துக் கொண்டார். பாரூக்கின் பாலியல் வன்கொடுமை குறித்து கணவரின் தங்கை எரமிடமும், பாரூக்கின் மனைவி பாத்திமாவிடமும் கூறிக் கதறி அழுதுள்ளார்.
படிக்க: ’ஏற்கெனவே டிக்டாக் உள்ளிட்ட ஆப்கள் வைத்திருந்தாலும்...’ மத்திய அரசு வைத்த செக்படிக்க: விலக்குகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்?

ஆனால் இருவரும் பாரூக் என்ன சொல்கிறாரோ அதன்படி செய்ய வேண்டும் என அந்தப் பெண்ணிடம் கூறி விட்டனர். மேலும் அந்த போட்டோவைக் காட்டி மிரட்டி 25 பவுன் நகைகளைப் பறித்துள்ளார்.

இதையடுத்து 2008ம் ஆண்டு காவல்நிலையத்தில் இதுகுறித்து அஸ்லாமின் மனைவி புகாரளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல், நகைகளைத் திருப்பிக் கொடுக்கும்படி பாரூக்கை அறிவுறுத்தியுள்ளனர்; பாரூக்கும் நகைகளைத் திருப்பிக் கொடுக்கவில்லை.

தொடர்ந்து போட்டோவைக் காட்டி மிரட்டி கடந்த 9 ஆண்டுகளாக அந்தப் பெண்ணை பாரூக் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பிரச்னை வெடிக்காமல் இருக்க, பாரூக் தனது நண்பரான அஸ்லாமை மதுபோதையில் ஆழ்த்தி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம், தனது நண்பர் அஸ்லாமின் மூத்த பெண்ணிடம் பாரூக் பாலியல் ரீதியில் சில்மிஷம் செய்துள்ளார்.  தன்னைச் சீரழித்ததுமின்றி தன் மகளையும் சீரழிக்க பாரூக் முயன்றதால் கோபமடைந்த அஸ்லாமின் மனைவி, உடனடியாக போலீசாரிடம் புகாரளித்தார்.

புகாரின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை, வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்தது, குற்றம் புரிய துாண்டிவிட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குகள் பதிவு செய்து பாலியல் வன்கொடுமை செய்த பாரூக், அந்தப் பெண்ணின் கணவர் அஸ்லாம் இருவரையும் கைது செய்துள்ளனர்.

தலைமறைவான அஸ்லாமின் சகோதரி எரம், பாரூக்கின் மனைவி பாத்திமா இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மது போதைக்கு அடிமையான கணவரால், அவரின் நண்பர் மூலம் 9 ஆண்டுகள் மனைவி சித்ரவதை அனுபவித்த சம்பவம் திருச்சி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading