முகப்பு /செய்தி /Breaking & Live Updates / சிக்னல் கோளாறு.. செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிப்பு

சிக்னல் கோளாறு.. செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிப்பு

ரயில்

ரயில்

Chennai : சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதி

  • Last Updated :

சிக்னல் கோளாறு காரணமாக செங்கல்பட்டு தாம்பரம் வழியாக புறப்பட்டு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் வழியில் ஆங்காங்கே நிறுத்தி  வருவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். செங்கல்பட்டில் இருந்து புறப்பட்ட புறநகர் ரயில் சிக்னல் கோளாறு காரணமாக தற்போது வண்டலூர் ரயில் நிலையத்தில் நிற்கிறது.

சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதால் பீச் ஸ்டேஷனில் இருந்து செல்லக்கூடிய புறநகர் ரயிலும் செங்கல்பட்டு தாம்பரத்தில் இருந்து வரக்கூடிய ரயில்களும் குறிப்பிட்ட அட்டவணை நேரப்படி இல்லாமல் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் பணிக்கு செல்லக்கூடியவர்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

First published:

Tags: Chennai, Chennai local Train, Tambaram