ஹோம் /நியூஸ் /Breaking & Live Updates /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் பிளான் பண்ணி செய்தால் வெற்றி இவர்களுக்கே.. இன்றைய ராசிபலன் - ஜூன் 18, 2022

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் பிளான் பண்ணி செய்தால் வெற்றி இவர்களுக்கே.. இன்றைய ராசிபலன் - ஜூன் 18, 2022

தெய்வீக வாக்கு: இன்றைய ராசிபலன் - ஜூன் 18, 2022

தெய்வீக வாக்கு: இன்றைய ராசிபலன் - ஜூன் 18, 2022

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மேஷம்:

இன்று முன்னறிவிப்பின்றி உங்களை நோக்கி வரும் பல விஷயங்களுக்கு நீங்கள் ரியாக்ட் செய்யும் சூழலை கண்டு நீங்களே உங்களை அதிர்ஷ்டசாலி என்று உணரலாம். எந்த ஒரு முக்கிய திட்டங்கள் அல்லது வேலைகளை துவக்கும் முன் அதற்கு ஏற்ற முன்னேற்பாடுகளை செய்துளீர்களா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கார்னெட் ஸ்டோன்

ரிஷபம்:

உங்களுக்குள் இன்று தோன்றும் சில உள் உணர்வுகள் உங்கள் கடந்தகால முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வைக்க கூடும். உங்கள் குழந்தைகள் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடலாம். இது முற்றிலும் மதிப்புக்குரியதாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நீல டர்மலைன்

மிதுனம்:

உங்கள் நிறுவனம் அல்லது நிர்வாகம் எடுக்கும் அதிரடி முடிவுகளால் உங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படலாம். நாளின் இரண்டாம் பாதி உங்களுக்கு நல்ல உற்சாகமாக செல்ல கூடும். பல தொடர்புகளுடன் நீங்கள் நீண்ட நாட்களாக பேசாமல் இருப்பதாய் இன்று நீங்கள் நினைத்து பார்ப்பீர்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நட்சத்திர வடிவ கிரிஸ்டல்

கடகம்:

சமீபத்திய உங்கள் சாதனையின் காரணமாக நீங்கள் கெத்தாக உணர்ந்தால், உங்களை வீழ்த்த உங்களுக்கு அருகிலேயே இன்று யாராவது தயாராகி இருக்கலாம். அவரை எதிர்த்துப் போராட உங்களுக்கு ஒரு சிறந்த உத்தி தேவைப்படலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து இருந்து நல்ல செய்திகளை பெறுவீர்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு தெளிவான குவார்ட்ஸ் கிரிஸ்டல்

சிம்மம்:

உங்கள் உடலையும், மனதையும் அமைதியாக வைத்திருக்க இன்று ஒரு நல்ல நாள். நீங்கள் எடுக்கும் ஓய்வு மூலம் ஒட்டுமொத்த ஆற்றல்களும் சீரமைக்கப்படும். இன்று நீங்கள் ரிலாக்ஸாக உணர்வீர்கள். இசை கேட்பது அல்லது நீண்ட நடைப்பயிற்சி என்று உங்களுக்கு பிடித்த வேலைகளில் ஈடுபடுங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு புல்லாங்குழல்

கன்னி:

சில நேர்மறையான மாற்றங்களை வரவேற்க நீங்கள் இன்று தயாராக இருக்க வேண்டும். உங்கள் பணியிடத்தில் சில புதிய யோசனைகளை நீங்கள் காணலாம். செல்வாக்கு மிக்க ஒருவர் விரைவில் இன்று உங்களை அணுகலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மஞ்சள் படிகம் கிரிஸ்டல்

துலாம்:

இன்று ஒருவருக்கு உண்மையாக உதவ வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் உங்கள் தயக்கம் உங்களை உதவி செய்வதில் இருந்து விலக்கி வைக்கலாம். ஒரு குறுகிய பயணத் திட்டம் உங்களை உற்சாகப்படுத்தும். உங்கள் எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட வேலை வாய்ப்பு இன்று கிடைக்கலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மலை

விருச்சிகம்:

உங்கள் பணிக்கான அங்கீகாரத்தை ஏதேனும் ஒரு வகையில் இன்று நீங்கள் பெற வாய்ப்பு உள்ளது. சில எதிர்பாராத விருந்தினர்களின் வருகை நாள் முடிவில் உங்களை ஆச்சரியப்படுத்தலாம். இன்று நீங்கள் மிகுந்த நம்ம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கோல்டு காஃபி

தனுசு:

உங்கள் நெருங்கிய நண்பர் ஒருவருக்கு இப்போது உங்களது உணர்ச்சிபூர்வமான ஆதரவு தேவைப்படலாம். நீங்கள் சுய கவனிப்பில் ஈடுபடுவதை நீங்கள் காணலாம். இன்று உங்களை அலுவலகத்தில் சில புதிய முகங்கள் உங்களுக்கு அறிமுகமாக கூடும். நீங்கள் இன்று சில விஷயங்களில் சுயநலமாக நடந்து கொள்வீர்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு புதிய மலர்

மகரம்:

இன்று உங்களுக்கு திடீர் பயண திட்டம் வரலாம், அது வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு பயணமாக அமையலாம். வரவிருக்கும் மாற்றத்தைப் பற்றிய அறிகுறிகளை உங்களுக்கு வழங்க கூடிய சூழல்களை நீங்கள் பார்ப்பீர்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ரோஜா குவார்ட்ஸ்

கும்பம்:

உங்கள் வாழ்க்கையில் வரும் சில நிலைத்தன்மை உங்களை நல்ல நகைச்சுவையுடன் வைத்திருக்கலாம். இன்று நீங்கள் சில சமயம் சோம்பலாக உணரலாம், ஆனால் அது தற்காலிகமானது. ஒரு பழைய நண்பருடன் இன்று நீங்கள் மீண்டும் சேருவீர்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பளபளக்கும் தண்ணீர்

மீனம்:

இத்தனை நாள் உங்கள் தோள்களில் இருந்த பெரிய பொறுப்பு இன்றுடன் இறங்க போகிறது. நீங்கள் சில சமயங்களில் விரக்தியாக உணரலாம், ஆனால் பொறுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு தெரியாத சில ரகசியங்களை இன்று நீங்கள் தெரிந்து கொள்ள நேரிடலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நியான் சைன்

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Oracle Speaks