Today News in Tamil (May 27): யாஸ் புயல், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், கொரோனா அப்டேட் உடனுக்குடன்

Today News Tamil - Live Updates: யாஸ் புயல், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | May 27, 2021, 07:38 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 19 DAYS AGO

    AUTO-REFRESH

    14:8 (IST)

    14:8 (IST)

    தொடர் கனமழையால் கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இருந்து அதிகளவு உபரிநீர் வெளியேற்றம்...

    13:45 (IST)

    6 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறையவில்லை - முதலமைச்சர் 

    நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து வைரஸ் பரவலை தடுக்க அறிவுறுத்தல்.கோவை,திருச்சி போன்ற 6 மாவட்டங்களில் தொற்று குறையவில்லை. -  அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில்  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு 

    13:37 (IST)

    தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு திட்டம் என தகவல். 
    சென்னை தலைமைச்செயலகத்தில்  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  தளர்வுகள் அற்ற ஊரடங்கை அமல்படுத்துவது அல்லது மளிகை மற்றும் காய்கறி கடைகளுக்கு மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இருவேறு கருத்துக்களை அதிகாரிகள் தெரிவித்ததால் முடிவு எட்டப்படவில்லை என தகவல்.

    12:15 (IST)

    புதுச்சேரி மண்ணாடிப்பட்டு சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராஜாராம் (74) கொரோனா தொற்றால்  உயிரிழந்தார் 

    11:46 (IST)

    ரேஷன் கடை துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பிற்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.இதனை  எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு . 

    11:41 (IST)

    புதுச்சேரியில் 1 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு,  மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 1137 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 20 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

    11:39 (IST)

    கரும்பூஞ்சை  தொற்றுக்கு மருந்து விலையை குறைத்தது Genetics Life Science நிறுவனம் 

    ரூ.7000க்கு விற்கப்பட்ட அம்போடெரிசின் - பி மருந்தை ரூ.1200 க்கு விற்க ஒப்புதல் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கோரிக்கையை ஏற்று மருந்து விலையை குறைத்துள்ளதாக தகவல் 

    10:20 (IST)

    கொரோனா முதல் அலையின் போது போதிய கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டது.ஆக்சிஜன், மருந்து, படுக்கைகள் என எதிலும் தட்டுப்பாடுகள் இல்லை - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 

    10:18 (IST)

    மதுரையில் தீ வேகத்தில், புயல் வேகத்தில் கொரோனா பரவி வருகின்றது. முன்னர் இருந்த அரசு வைத்து இருந்த  கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளை உடனே மாற்றியது அதுவே இந்த அரசின் கொரோனா தடுப்பு பணியின் பின்னடைவுக்கு காரணம். - 
    முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ