Tamil Latest NewsToday Live Updates: மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு முயல்வது என்ன நியாயம்? - எல்.முருகன் கேள்வி

Today News Tamil - Live Updates:கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | June 11, 2021, 14:30 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 4 MONTHS AGO

    AUTO-REFRESH

    15:2 (IST)

    திருச்சி மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு

    திருச்சி மாவட்டம் புலிவலம் பகுதியில் உய்யகொண்டான் ஆற்றில் உள்ள புதிய மணல் போக்கி, உய்யகொண்டானில் இருந்து செல்லும்  கொடிங்கால் வாய்க்கால் தூர் வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.கொடிங்கால் வாய்க்கால் தூர் வாரும் பணி ₹ 29.70 லட்சத்தில் நடைபெறுகிறது.

    14:31 (IST)

    மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு முயல்வது என்ன நியாயம்? - எல்.முருகன் கேள்வி

    தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்து நிரந்தரமாக மூட முன்வர வேண்டும். கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்றின் போது மதுகடைகளை மூட வேண்டும் என்று திமுக போராடிவிட்டு இப்போது மதுக்கடைகளை திறக்க முயல்வது என்ன நியாயம்? என எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    13:52 (IST)

    கொரோனா மூன்றாம் அலை - சென்னை மாநகராட்சி ஆலோசனை.

    கொரோனா தொற்றின் இரண்டாம் அலை முடிவதற்குள் மூன்றாம் அலையை கையாள்வது குறித்து சென்னை மாநகராட்சி ஆலோசனை மேற்கொள்கிறது.

    13:52 (IST)

    தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் புகார்: நடிகர் விஷாலின் உதவியாளர் தி.நகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார்.

    13:52 (IST)

    கோவையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்சின் 2 வது தவணை தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியது.ஒவ்வொரு மையத்திலும் 190 பேருக்கு டோக்கன் கொடுத்து தடுப்பூசி போடப்படுகின்றது.

    12:17 (IST)

    இறப்பு சான்றிதழ்களை தவறாக வழங்கினால் எப்படி  நிவாரண தொகையை போய் சேரும்? - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி.

    கொரோனா காலத்தில் இணை நோய்களால் மரணமடைந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை  நிபுணர் குழுவை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.இறப்பு சான்றிதழ்களை தவறாக  வழங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி  நிவாரண தொகையை போய் சேரும்? - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி.

    12:7 (IST)

    52,500 புள்ளிகளைக் கடந்து புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ

    மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 52 ஆயிரத்து 500 புள்ளிகளைக் கடந்து வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.ஆசிய பங்குச்சந்தைகளில் நிலவும் ஏற்றம் காரணமாக, இந்திய பங்குச்சந்தையும் இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இதனால் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில் 52 ஆயிரத்து 300 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ், இன்று 267 புள்ளிகளைக் கடந்து 52 ஆயிரத்து 567 புள்ளிகள் என்ற புதிய மைல்கல்லை எட்டியது. அத்துடன் இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டியும், 15 ஆயிரத்து 800 புள்ளிகளைக் கடந்துள்ளது. எரிசக்தி மற்றும் உலோக நிறுவனங்களின் பங்குகள் சுமார் 1 சதவிகிதம் அளவில் ஏற்றம் கண்டுள்ளன.

    12:5 (IST)

    நேற்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2327 நபர்களுக்கு  கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    இதுவரை 21,48,912 நபர்களுக்கு சென்னையில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. - சென்னை மாநகாரட்சி

    12:5 (IST)

    தமிழகத்தில் தடுப்பூசி பெற அறிவித்த டென்டர்களுக்கு பதில் வராது என்பது எனக்கு முன்பே தெரியும் - ப.சிதம்பரம்

    12:5 (IST)

    மக்கள் மீது வருத்தம் உள்ளது - சுயக்கட்டுபாடு இருந்தால் தான் நோய் தொற்றை குறைக்க முடியும் - ப.சிதம்பரம்