Latest News : தேனி, திண்டுக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Today News Tamil - Live Updates:கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

 • News18 Tamil
 • | June 22, 2021, 15:28 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED A MONTH AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  15:51 (IST)

  திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் உறுதியாக படிப்படியாக நிறைவேற்றப்படும் - அமைச்சர் எ.வ.வேலு 

  15:34 (IST)

  கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என,காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

  14:47 (IST)

  14:47 (IST)

  எஸ்.பி.ஐ ஏடிஎம்  நூதன கொள்ளையர்களை பிடிக்க ஹரியானா மாநிலத்திற்கு காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் விரைந்தனர்.சென்னையில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களை குறிவைத்து கொள்ளையடிப்பவர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

  14:46 (IST)

  அதிமுக ஆட்சியில் போது கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக கையாண்ட அரசு  அதிமுக அரசு என்று பாரத பிரதமர் பாராட்டியுள்ளார். - எடப்பாடி பழனிசாமி

  14:45 (IST)

  சட்டமன்றத்தில் இன்று  : 

  சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் :  தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி : தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என ஆளுநர் உரையிலே உள்ளது.

  பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை அமைச்சர் :  கடைசி 10 ஆண்டுகளில் எந்த சட்டத்தின் அடிப்படையில், எந்த வழிமுறைகளை மாற்றியமைத்து  தமிழர்களை தவிற வேற மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்பப்படது என ஆய்வு செய்து அதை தவிர்ப்தற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

  14:23 (IST)

  மின் கட்டணத்தில் குளறுபடிகள் இருப்பதாக மக்கள் கூறியிருந்தனர்.அதற்காக 2 வகையாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.இதன் மூலம் 11 லட்சத்து 40 ஆயிரம் பேர் திருத்திய மின் கட்டணத்தை செலுத்தி உள்ளனர். - செந்தில் பாலாஜி, மின்சாரத்துறை அமைச்சர்

  13:56 (IST)

  நூதன கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை

  சென்னையில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களை குறிவைத்து கொள்ளையடிப்பவர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.சென்னை ராமாபுரம் வள்ளுவர் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம்.மேலாளராக பணியாற்றி வரும் முரளி பாபு இரு தினங்களுக்கு முன்பு கணக்கு சரிபார்த்த போது ஏ.டி.எம்.-ல் ஒன்றரை லட்சம் ரூபாய் மாயமாகி உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது  ஏ.டி.எம்.-க்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் நூதன முறையில் ஒன்றரை லட்சத்தை எடுத்துச் சென்றுள்ளனர். அதாவது ஏ.டி.எம்.-ல் பணம் வரும் போது அந்த ஷட்டரை 20 நொடிகள் கையால் தடுத்தால், பரிவர்த்தனை நடக்காதது போல வாடிக்கையாளர் கணக்கில் மீண்டும் பணம் வரவாகிவிடும், இந்த நூதன முறையை பயன்படுத்திதான் இவர்கள் ஒன்றரை லட்சம் ரூபாயை கொள்ளையடித்துள்ளனர்.

  13:53 (IST)

  கஞ்சா விற்ற விவசாயி கைது

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விவசாய நிலத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். களம்பூர் பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். அப்போது களம்பூர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பாலசுந்தரம் என்ற விவசாயி, கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை பிடித்த போலீசார் 1கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் 8 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

  13:25 (IST)

  தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி நிராகரிப்பு 

  தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் புதிய ஆய்வுக்காக மாநில சுற்றுச்சூழல் குழுவிடம் ஓஎன்ஜிசி விண்ணப்பித்தது. அவற்றை நிராகரித்ததாக சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.