பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பத்து மாநில முதல்வர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து அவ்வப்போது பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் முறையில் ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். இன்று, ஏழாவது முறையாக மாநில முதல்வர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கலந்துகொண்டார். இன்றைய கூட்டத்தில் 10 மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மேற்குவங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், பீகார், குஜராத், தெலங்கானா, உத்தரப் பிரதேச ஆகிய மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உடனடியாக 3,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. உடனடியாக நிதி ஒதுக்கவேண்டும். உயர்தர வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்கு, பி.சி.ஆர் கருவிகள் வாங்குவதற்கான பாதி நிதியையும் மத்திய அரசு வழங்கவேண்டும். நவம்பர் மாதம்வரை பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க 55,000 டன் பருப்பு வழங்கவேண்டும்’ என்றும் கோரிக்கைவைத்தார்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.