ஊதிய உயர்வு கோரி திருப்பூர் ஒப்பந்த பனியன் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்த போரட்டம்

Youtube Video

ஊதிய உயர்வு கோரி திருப்பூர் ஒப்பந்த பனியன் நிறுவன ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 • Share this:
  திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கும் பெரிய பின்னலாடை நிறுவனங்களிடம் சிறிய நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் துணிகளை வாங்கி தைத்து வழங்குகின்றன. இருதரப்பினரிடையே கடந்த 2016ம் அண்டு மேற்கொள்ளப்பட்ட ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் கடந்த ஆண்டுடன் முடிவடைந்தது. இந்தநிலையில் புதிய ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்திடம் "பவர்டேபிள்" எனப்படும் சிறு நிறுவன உரிமையாளர் சங்கம் பலமுறை கோரிக்கை விடுத்தது.

  மேலும் படிக்க...பெகாசஸ் விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுக்கவேண்டும் - மம்தா பானர்ஜி

  எனினும் இதுவரை பேச்சுவார்த்தை தொடங்கப்படாததால் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக "பவர்டேபிள்" உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் நாளொன்றுக்கு சுமார் 5 கோடி ரூபாய் வரை உற்பத்தி பாதிக்கப்படுவதுடன். ஒரு லட்சம் ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் நந்தகோபால் தெரிவித்துள்ளார்.  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vaijayanthi S
  First published: