ஒட்டகத்துக்கு முத்தம் கொடுக்க நாய்க்குட்டியின் நடனம் - வைரல் வீடியோ!

வைரல் வீடியோ

பெரிய யானைகளுக்கு பின்னால் வரும் குட்டியானை ஒன்று குட்டிக்கரணம் அடித்து பள்ளத்தில் இறங்கி ஓடுகிறது

  • Share this:
நாய்க்குட்டி ஒன்று நடனமாடியவாறு சென்று ஒட்டகத்துக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ reddit தளத்தில் வைரலாகியுள்ளது.

நாய்க்குட்டிகளின் வீடியோ எப்போதும் ரசிக்கும் வகையிலேயே இருக்கும். வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளான, அன்பை பொழிவதற்கு எப்போதும் தயங்காது. அதேநேரத்தில் அவை செய்யும் சேட்டைகளுக்கும் பஞ்சமிருக்காது. அந்தவகையில், நாய்க்குட்டி ஒன்று செய்யும் ரசிக்கும் வகையிலான வீடியோ ஒன்றை ரெட்டிட் இணையதளத்தில் வைரலாகியுள்ளது. ஒட்டகம் ஒன்று கட்டிப்போடப்பட்டிருக்கும் இடத்தில் இருக்கும் நாய்க்குட்டி துறுதுறுவென நடனமாடிக்கொண்டே இருக்கிறது.

மெல்ல மெல்ல அருகே செல்லும்போது, நாய்க்குட்டிக்காக ஒட்டகம் தலையை கீழிறக்குகிறது. அப்போது, ஒட்டகத்துக்கு நாய்க்குட்டி முத்தம் கொடுக்கிறது. கியூட்டாக இருக்கும் இந்த நிகழ்வை அங்கிருந்த ஒருவர் வீடியோவில் பதிவு செய்து reddit தளத்தில் பதிவேற்றியுள்ளார். பார்க்கும் அனைவரையும் ரசிக்க வைக்கும் வகையில், இந்த வீடியோ உள்ளது. ரெட்டிட் தளத்தை பயன்படுத்தும் பலரும் நாயின் சேட்டை வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.இந்த வீடியோவுக்கு கீழ் கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், சோ கியூட் என கூறியுள்ளனர். பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், ரசிக்கும் வகையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். நாய்க்குட்டியின் நடனம் அழகாக இருப்பதாகவும், ஒட்டகம் உருவத்தில் பெரியதாக இருந்தாலும், நாய்க்குட்டி அதனை அன்பால் வளைத்துப்போட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

Also read: மத உணர்வுகளை காயப்படுத்தி விளம்பரம் – பிரபல பிரியாணி உணவகத்துக்கு எதிர்ப்பு!

இதேபோல், யானைகள் தினத்தன்று ஒரு அழகான வீடியோ டிவிட்டரில் வைரலானது. அந்த வீடியோவில், காட்டுக்குள் சுற்றித் திரியும் யானைக்கூட்டம் ஒன்று ஒரு பள்ளத்தின் அருகே வருகிறது. அப்போது, அந்த பள்ளத்தில் பெரிய யானைகள் இறங்குவதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றன.

ஆனால், பெரிய யானைகளுக்கு பின்னால் வரும் குட்டியானை ஒன்று குட்டிக்கரணம் அடித்து பள்ளத்தில் இறங்கி ஓடுகிறது. அந்தப் பள்ளத்தில் இறங்குவதற்காக முழங்காலிட்டு, பெரிய யானைகள் கஷ்டப்பட்ட நிலையில், குட்டி யானை அடித்த குட்டிக்கரணம் பலரையும் ரசிக்க வைத்தது. நெட்டிசன்கள் பலரும் அந்த வீடியோவை லைக் செய்து ஷேர் செய்தனர். மீம்ஸூகளிலும் இந்த வீடியோ இடம்பெற்றது. நெட்டிசன் ஒருவர் யானைகளின் இந்த வீடியோவைப் பகிர்ந்து, சீனியர் டெவலப்பர்கள் என மூத்த யானைகளையும், ஜூனியர் டெவலப்பர்கள் என குட்டி யானைகளையும் குறிப்பிட்டிருந்தார்.

Also read: TN Budget 2021 | தமிழக பட்ஜெட்டில் 10 முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

ஒரு விஷயத்தை ஜூனியர்கள் எப்படி அணுகுகிறார்கள், சீனியர்கள் அணுகும் விதம் எப்படி என்பதை அவர் கிண்டலாக சுட்டிக்காட்டியிருந்தார். இந்திய வனத்துறை அதிகாரிகள் ஒரு சிலரும் யானைகளின் வீடியோவை பகிர்ந்திருந்தனர். அதில், யானைகள் வனத்துக்கு ஆற்றும் பங்கையும், அவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் கேப்சனில் வலியுறுத்தியிருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேபோல், Elephants_Day2021 என்ற ஹேஸ்டேக்குகளுக்கு கீழ் பலரும் யானைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டனர். குறிப்பாக, வனப்பகுதிகளுக்குள் சாலை அமைப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
Published by:Arun
First published: