• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • காலி வீடுகளைக் குறிவைக்கும் திருடர்கள் கைது : 40 சவரன் நகை மீட்பு..!

காலி வீடுகளைக் குறிவைக்கும் திருடர்கள் கைது : 40 சவரன் நகை மீட்பு..!

திருப்பூர் கொள்ளையர் கைது

திருப்பூர் கொள்ளையர் கைது

சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் குற்றவாளிகள் திருப்பூரைச் சேர்ந்த கொள்ளையர்கள் என தெரியவர அவர்களை அங்கு வைத்து கைது செய்து

  • Share this:
வீட்டை உடைத்து கொள்ளையடிக்கும் தொடர் கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 40 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது.

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் 5-வது அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் பாரதி, இளையராஜா தம்பதியர். கடந்த ஜனவரி 14-ஆம் தேதி இரவு ஒன்பது மணி அளவில் வீட்டை பூட்டி விட்டு திருச்சிக்கு பாட்டியின் நினைவஞ்சலிக்கு சென்று திரும்பிய போது வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப் பட்டிருப்பதாக புகார் அளிக்கப்பட்டது.

வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் குற்றவாளிகள் திருப்பூரைச் சேர்ந்த கொள்ளையர்கள் என்பது தெரியவர, கைது செய்து சென்னை அழைத்து வந்து இரண்டு பேரையும் தீவிர விசாரணை நடத்தியபோது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

குற்றவாளிகள் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வன்னி கருப்பு(27) மற்றொரு குற்றவாளி மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுரேந்திரன் (எ) ராஜ் என்பது தெரியவந்தது. அந்த இரண்டு நபர்களும் கடந்த மாதம் 17-ஆம் தேதி நீலாங்கரையில் ஒரு வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிவகங்கை மற்றும் மதுரை திருப்பத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளை சம்பவம் மற்றும் பைக் திருட்டு உட்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. கைதுசெய்த இருவரிடமிருந்து 40 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Also See...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Gunavathy
First published: