வராத ஆட்சிக்கு வாக்குறுதிகளை தருகிறார்கள் - திமுக குறித்து நடிகை விந்தியா சாடல்

வராத ஆட்சிக்கு வாக்குறுதிகளை தருகிறார்கள் - திமுக குறித்து நடிகை விந்தியா சாடல்

நடிகை விந்தியா

குரலை வைத்து ஊரை ஏமாற்றி குடும்பத்தை காப்பாத்தியவர் கருணாநிதி. வலியாரிடமிருந்து எளியாரை காக்க காலம் கை காட்டிய தலைவர் தான் எடப்பாடியார்.

  • Share this:
    சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக்கை ஆதரித்து நடிகை விந்தியா திருவான்மியூரில் பொது மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

    பிரசாரத்தின் போது பேசிய நடிகை விந்தியா, "வாரிசு அரசிலையும் குடும்ப லாபத்திற்காக கூஜா தூக்குவதையும் கற்று கொடுத்தவர் கருணாநிதி. வேளச்சேரி திமுக வேட்பாளர் மீது கற்பழிப்பு வழக்கு உட்பட 100  வழக்குகள் உள்ளன அப்படிபட்ட ஒருவர் உங்களுக்கு தேவையா?

    குரலை வைத்து ஊரை ஏமாற்றி குடும்பத்தை காப்பாத்தியவர் கருணாநிதி. வலியாரிடமிருந்து எளியாரை காக்க காலம் கை காட்டிய தலைவர் தான் எடப்பாடியார்.

    திமுக காரர்கள் ஐயோ அம்மா கொல்றாங்களேனு சொல்லிட்டு வீரன் என்கிறார்கள், தமிழை அழித்துவிட்டு தமிழன் என்கிறார்கள், கச்சத்தீவை காவு கொடுத்துவிட்டு மீனவ நண்பன் என்கிறார்கள், குங்கும பொட்டையும் விபூதியையும் அழித்துவிட்டு இந்துக்கு ஆதரவு என்கிறார்கள், உதயநிதியை மட்டும் வளர்த்துவிட்டு ஜனநாகயகம் என்கிறார்கள், பிரியாணி கடையை உடைத்து விட்டு கட்டுப்பாடு என்கிறார்கள்,  அப்பா சமாதியில் தயிர் வடையை வைத்து பகுத்தறிவு என்கிறார்கள். குடும்பத்திலுள்ள அனைவருக்கும் பதவி கொடுத்துவிட்டு வேலை வாய்ப்பு என்கிறார்கள் .

    நாதாரி தனத்தையே நாசூக்காக செய்பவர்கள் தான் திமுக காரார்கள் . திமுகவிற்க்கு ஓட்டு போடுறதும் குரங்கிற்கு கோட்டு போடுறதும் ஒன்று தான் சுத்தமாக பயன் அற்றது

    தாயை மதித்து, மண்ணை மதித்து, மக்களை மதித்து, தமிழை மதித்து, தமிழர்களை மதித்து, தாய்பால் குடிச்ச எந்த தமிழனும் திமுகவிற்க்கு ஓட்டு போட மாட்டார்கள்.

    திமுககாரர்கள் வெறும் விளம்பரத்தை நம்பியே தேர்தலை சந்திப்பவர்கள். விளம்பரத்தை நம்பியே தேர்தலை சந்திப்பவர் ஸ்டாலின்.

    ஸ்டாலின் நடத்திய கிராம சபை கூட்டத்தில் வந்தவர்கள் எல்லாம் மைக்கை பிடித்துக் கொண்டு கரவ மாட்டை காணோம், கட்டிய கணவரை காணோம், குழந்தையை காணோம். திமுக ஆட்சியில் தருவதாக சொன்ன நிலத்தை காணோம் என கேட்டார்கள் உடனே ஸ்டாலின் சங்கத்தை கலைத்து விட்டார்.

    எல்லா கடைகளிலும் விடியலை நோக்கி என்ற போர்டை மாட்டியுள்ளார் ஸ்டாலின் .  பிரசாரம் செய்த இடங்களில் கேட்டுக்கொண்டேன் எல்லாம் கடைக்காரர்களிடம் திமுக காரர்களை நம்பாதீர்கள் அவர்களை நம்பி போர்டு வைத்தீர்கள் என்றால் கலாட்டா செய்து கல்லா பெட்டியை தூக்கிட்டு போய்டுவார்கள்.

    திமுக காரர்கள் கலாட்ட பண்ணாத ஒரே கடை சாக்கடை மட்டும் தான். ஓட்டு வைத்து மக்களை ஏமாற்ற முடியாததால் புதிதாக ஸ்டாலினுக்கு, ஸ்டாலின் தான் வராரு என விளம்பர பாட்டை விட்டிருக்கிறார்கள்.

    உண்மையில் ஸ்டாலினுக்கு பாட்டு போட்டால் ஸ்டாலின் தான் வராரு மக்கள் எல்லாம் உஷாரு என்று தான் இருக்கும். திமுக ஆட்சியில் இருக்கும் போது மக்களை பற்றியும் மக்கள் தேவையை பற்றியும் யோசிக்க மாட்டார்கள். திமுக ஆட்சியில் செய்கிற ஒரே வேலை, விழா நடத்துவது தான்.

    ஆட்சியில் இல்லை என்றால் ஊர் ஊராக சென்று டிராமா போடுவார்கள். 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால் திமுக காரர்கள் அகோர பசியில் உள்ளார்கள். வீட்டுக்கு வரும் திருடனை கூட நம்புங்கள் தயவு செய்து திமுககாரர்களை நம்பாதீர்கள்

    10 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லாததால் மின்வெட்டு இல்லை, கட்டப்பஞ்சாயத்து இல்லை, லாட்டரி இல்லை, கந்துவட்டி இல்லை, ரவுடிசம் இல்லை, குண்டாயிசம் இல்லை, கல்வி கற்க தடை இல்லை, காவல்துறைக்கு கவலை இல்லை, சிறுவியாபாரிகளுக்கு சிக்கல் இல்லை ஆகவே திமுக நாட்டிற்கு தேவை இல்லை

    தேர்தல் என்பதால் ஸ்டாலின் விதவித வேஷத்தில் வருவார் , மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்து கொள்ளை அடிக்க பார்க்கிறார் ஸ்டாலின் நம்பாதீர்கள். வராத மழைக்கு வானிலை அறிக்கை படிப்பதை போல வராத ஆட்சிக்கு வாக்குறுதிகளை தருகிறார்கள்" என நடிகை விந்தியா பேசினார்

    செய்தியாளர் ப.வினோத்கண்ணன்
    Published by:Arun
    First published: